பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 13, 2010

பாங்குக்கு உளு அவசியமா

பாங்குக்கு உளு அவசியமா


கேள்வி:-- ஆடு,மாடுகளை அறுப்பதற்கும் பாங்கு சொல்வதற்கும் உளு செய்வது அவசியமா?



பதில்:- ஆடு,மாடுகளை அறுப்பதற்கு உளு அவசியம் என்று எந்த ஹதீஸூம் கிடையாது. குளிப்புக் கடமையான நிலையில் கூட ஆடு மாடு மற்றும் கோழிகளை அறுக்கலாம்.

பாங்கு சொல்வதற்கு உளு அவசியம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாகும்.( பார்க்க திர்மிதி 201,202)

பாங்குக்கு உளு அவசியம் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை.

பாங்கு சொல்வதைக் கேட்டால் நீங்களும் அவர் சொல்வதைப் போல் கூறுங்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் :அபூஸயீத் (ரலி)

நூல்கள்: புகாரி, முஸ்லிம்

பாங்கு சொல்வதைக் கேட்பவர்கள் அதையே திருப்பிச் சொல்ல வேண்டும் என்று இந்த ஹதீஸ் கட்டளையிடுகின்றது. பாங்கைக் கேட்கக்கூடியவர்களில் சிலர் உளுவுடன் இருக்கக் கூடும் என்றாலும் அதிகமானவர்கள் உளூ இல்லாமல் தான் இருப்பார்கள். பாங்குக்கு உளூ அவசியம் என்றால் உளூ இல்லாதவர்கள் திருப்பிச் சொல்ல வேண்டாம் என்று நபிகல் நாயகம் ஸல் அவர்கள் சொல்லி இருப்பார்கள். அப்படி சொல்லாததால் உளு உள்ளவர் மட்டுமின்றி உளு இல்லாதவரும் அதைத் திருப்பிச் சொல்ல வேண்டும் என்பதில் ஐயம் இல்லை. இதிலிருந்து பாங்கு சொல்வதற்கு உளு அவசியமில்லை என்று கருதுலாம்

No comments:

Post a Comment