பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 13, 2010

பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா?

பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா?
நாம் படுத்துக் கிடக்கும் போது பாங்கு சொன்னால் உடனே எழுந்து உட்கார வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக உள்ளது

இந்த நம்பிக்கைக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடந்து விட்டு பாங்கு சொல்லி முடிந்தவுடன் எழுந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

626-حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا سكت المؤذن بالأولى من صلاة الفجر قام فركع ركعتين خفيفتين قبل صلاة الفجر بعد أن يستبين الفجر ثم اضطجع على شقه الأيمن حتى يأتيه المؤذن للإقامة

626 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

• ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாம் தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்லி முடித்ததற்கும் ஃபஜ்ர் தொழுகைக்கும் முன்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள். பின்னர் (இரண்டாம் தொழுகை அறிவிப்பான) இகாமத் சொல்(- தொழுகை நடத்து)வதற்காக தம்மிடம் முஅத்தின் (தம்மைக் கூப்பிட) வரும் வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.

புஹாரி 626

இந்த ஹதீஸின் தமிழாக்கத்தில் தெளிவு இல்லாமல் உள்ளது. சரியாக மொழி பெயர்த்தால் தால் இதை விளங்கிக் கொள்ள முடியும்.

• وسلم إذا سكت المؤذن بالأولى من صلاة الفجر قام فركع ركعتين خفيفتين قبل صلاة الفجر بعد أن يستبين الفجر ஃபஜ்ரு தொழுகையின் பாங்கை முஅத்தின் சொல்லி முடித்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவார்கள். ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள் என்பது தான் மேற்கணட் வாசகத்தின் சரியான பொருளாகும்.

பாங்கு சொல்லி முடியும் வரை படுத்துக் கிடந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லி முடித்தவுடன் எழுந்துள்ளதால் படுத்துக் கிடப்பதில் எந்தத் தவறும் இல்லை.

அதே நேரம் பாங்கு சொல்லும் போது அதே போல் நாமும் திருப்பிச் சொல்ல வேண்டும் என்ற கட்டளை உள்ளது.

611 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பாங்கு சப்தத்தைச் செவியுற்றால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்றே நீங்களும் சொல்லுங்கள்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி 611

அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களை திக்ருகளை படுத்துக் கொண்டு எப்படி சொல்ல முடியும் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே இந்தக் கருத்து விதைக்கப்படுகின்றது.

ஆனால் இறைவனை படுத்துக் கொண்டும் திக்ர் செய்யலாம் என்று திருக்குர்ஆனும் நபிவழியும் கூறுகின்றன.

அவர்கள் நின்றும், அமர்ந்தும்,படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப் பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்;10 எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்)

திருக்குர் ஆன் 3:191

நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும்,படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்! நீங்கள் அச்ச மற்ற நிலையை அடைந்தால் தொழுகையை (முழுமையாக) நிலை நாட்டுங்கள்!127 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

திருக்குர் ஆன் 4:103

297 (நபி ஸல அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.

புஹாரி 297

No comments:

Post a Comment