பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, July 18, 2010

மனித வெடிகுண்டு ??

? மனித வெடிகுண்டாகச் சென்று மரணிப்பவர்களை 'ஷஹீத் என்றும் வீரமகன் என்றும் சில முஸ்லிம் பத்திரிகைகள் எழுதுகின்றன. இது சரியா?



! ஷஹீத் என்ற வார்த்தையின் பொருள் தெரியாமல் பாபர் மசூதி ஷஹீதாக்கப்பட்ட நாள் என்று கூட பேசியும் எழுதியும் வருகின்றனர். பாபர் மசூதி நாளைக்கு சொர்க்கம் செல்லும் என்று நினைக்கிறார்களோ என்னவோ. தெரியவில்லை.தற்கொலை செய்து கொள்வது ஒருவரை நிரந்தர நரகத்தில் தள்ளும்.

 ஷஹீத் ஆவது நிரந்தர சொர்க்கத்தில் சேர்க்கும்.இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை. தற்கொலைக்கோஇ தற்கொலைத் தாக்குதல் நடத்தவோ மார்க்கத்தில் அறவே அனுமதி இல்லை. போர்க்களத்தில் வெற்றி பெறுவது தான் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். வீரமரணம் ஏற்பட்டால் அதையும் எதிர் கொள்ளும் துணிவுடன் வெற்றிக்காக போராடி அதில் இறந்தால் ஷஹீத் எனலாம்.

அதையும் கூட நம்மால் கூற முடியாது. அவரது எண்ணம் தூய்மையாக இல்லாவிட்டால் அவருக்கு நரகம் தான் கிடைக்கும்.ஆனால் தற்கொலைத் தாக்குதலில் வெற்றி பெறும் எண்ணமோஇ திட்டமோ ஏதும் இல்லை. இதில் கொல்லப்பட்டவரை ஷஹீத் என்று கூறினால் இதற்காக இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்.

No comments:

Post a Comment