? கியாமத் நாளின் 10 அடையாளங்கள் என்ற நூலில் (பி.ஜே. எழுதியது) ஈஸா நபி திரும்பி வருவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதற்கு முரணாக உள்ளதே?
! நபி என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் குழப்பம் தீர்ந்து விடும். நபி என்பது குறிப்பிட்ட பணியைச் செய்ய வேண்டிய பொறுப்பும்இ பதவியு மாகும். ஒருவரது பிறப்பு முதல் இறப்பு வரை ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மை அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது வயது வரை நபியாக இருக்கவில்லை. அவர்களிடம் ஒரு பொறுப்பு ஒப்படைக் கப்பட்ட பின்னர் தான் நபியாக ஆனார்கள். ஈஸா நபியவர்கள் மீண்டும் வரு வார்கள் என்றால் இறைத் தூதர் என்ற முறையில் எந்தப் பிரச்சாரத்தையும் மேற்கொள்ள மாட்டார்கள்.
இந்தச் சமுதாயத்துக்கு எந்த வகையிலும் தலைமை தாங்க மாட்டார்கள். தொழுகை நடத்தவும் மறுத்து விடுவார் கள். நீங்கள் தான் உங்களுக்குள் தலைமை தாங்க வேண்டும் என்று அறிவித்து விடுவார்கள் என்றெல்லாம் ஹதீஸ்கள் உள்ளன. இஸ்ரவேல் சமுதாயத்துக்கு அவர்கள் தூதராக முன்னர் அனுப்பப்பட்டிருந் தார்கள்.
இனி அவர்கள் வரும் போது இஸ்ரவேல் சமுதாயத்திற்கு நான் தான் தூதர் என்று கூற மாட்டார்கள். உயர்த் தப்படும் வரை தான் இஸ்ரவேல் சமுதா யத்துக்கு அவர்கள் நபியாக நியமிக்கப் பட்டார்கள். அவர்கள் நபி என்ற பொறுப்பைச் சுமந்து வர மாட்டார்கள் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) இறுதி நபி என்பதற்கு முரண் இல்லை.
No comments:
Post a Comment