பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, July 18, 2010

முஹம்மது என்ற சொல்???

?முஹம்மது என்ற சொல்லுக்கு புகழுக்கு உரியவர், புகழப்பட்டவர் என்பதாகப் பொருள் உண்டு. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே என்பதால் இதில் எனக்கு குழப்பமாக உள்ளது.



! அல்லாஹ்வின் பண்புகளில் அனேகமான பண்புகள் மனிதர்களிடமும் உள்ளன.கேட்பவன் பார்ப்பவன் அறிபவன் இரக்கமுள்ளவன் என்பன போன்ற தன்மைகள் இறைவனிடமும் உள்ளன. மனிதர்களிடமும் உள்ளன. ஒரு மனிதனை பார்ப்பவன் என்று கூறினால் அல்லாஹ்வின் பண்புகளை அவனுக்கு வழங்கியதாக ஆகாது.

 மனிதர்களிடம் உள்ள இப்பண்புகளுக்கும் அல்லாஹ்விடம் உள்ள இதே பண்புகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பிட்ட தொலைவில் குறிப்பிட்ட அளவு வெளிச்சத்தில் இருந்தால் தான் மனிதனால் பார்க்க முடியும். எதுவும் தடுக்காமல் இருந்தால் தான் பார்க்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றைத் தான் பார்க்க முடியும் என்றெல்லாம் மனிதனின் பார்க்கும் திறன் பலவீனமாக உள்ளது. எங்கே இருந்தாலும் எந்தத் தடை இருந்தாலும் இருட்டாக இருந்தாலும் இறைவன் பார்ப்பான். ஒரு நேரத்தில் முழு பிரபஞ்சத்தையும் அவனால் பார்க்க இயலும். மனிதனைப் பற்றி பார்ப்பவன் எனக் கூறும் போது இறைவனைப் போல் பார்ப்பவன் என்று கருதிக் கொண்டால் அது குற்றமாகிவிடும். இணை கற்பித்த லாகி விடும்.

மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள அளவுக்கு பார்ப்பவன் என்று கருதிக் கொண்டு இவ்வாறு பயன்படுத்தினால் குற்றமாகாது. இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகனின் அலி என்ற பெயரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றவில்லை. அலி (உயர்ந்தவன்) என்பது அல்லாஹ்வின் பெயராகவும் உள்ளது. மனிதனுக்கும் பெயர் வைக்கலாம். இரண்டுக்கும் கருத்தில் வித்தியாசம் உள்ளது. முஹம்மது என்பதும் இது போன்றது தான். இறைவன் எவ்வாறு புகழப்படு கிறானோ அது போல மனிதனும் சில வேளை புகழப்படுகிறான். ஒருவர் நமக்கு உதவி செய்யும் போது அவருக்கு நாம் நன்றி கூறுவது கூட அவரைப் புகழ்வது தான். மனிதனைப் பற்றி புகழப்பட்டவன் என்று கூறினால் ஏதோ ஒரு சில காரியங்களைப் புகழத்தக்க வகையில் செய்திருக்கிறான் என்று பொருள்.

அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு கூறினால் அவனது அனைத்து நடவடிக்கைகளும் புகழத்தக்க வகையில் உள்ளன என்பது பொருள். இந்த அடிப்படையில் தான் முஹம்மத் என்ற நபிகள் நாயகத்தின் பெயரை இறைவன் அனுமதிக்கிறான். இது பற்றி அதிக விளக்கம் அறிய பி. ஜைனுல் ஆபிதீன் எழுதிய திருமறையின் தோற்றுவாய் நூலைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment