பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

? வெங்காயம் சாப்பிட்டு விட்டுத் தொழுமிடத்திற்கு வரவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தொழுமிடம் என்பது பள்ளிவாசலை மட்டும் குறிக்குமா? அல்லது எல்லா இடங்களையும் குறிக்குமா?
வெங்காயம் சாப்பிட்டு விட்டு, நம்முடன் தொழ வேண்டாம் என்றும், மஸ்ஜிதிற்கு வர வேண்டாம் என்றும் பல்வேறு ஹதீஸ்களில் கூறப்பட்டாலும், பின்வரும் ஹதீஸில் அதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், சீமைப்பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்து விடவே அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டு விட்டோம். அப்போது அவர்கள், ''துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில் மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 874

மனிதர்களுக்குத் தொல்லை தருவதால் தான் நபி (ஸல்) அவர்கள், வெங்காயம் சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கு வருவதைத் தடை செய்கின்றார்கள். எனவே, பள்ளிவாசல் மட்டுமல்லாது வேறு எந்த இடத்தில் ஜமாஅத்தாகத் தொழுதாலும் இந்தக் காரணம் பொருந்தும்.

தனியாகத் தொழும் போது யாருக்கும் தொந்தரவு இருக்காது. ஆனால் பள்ளிவாசல் அல்லாத இடங்களில் ஜமாஅத்தாகத் தொழும் போது வெங்காயம் போன்ற பொருட்களைச் சாப்பிட்டிருந்தால் அந்த வாடை அருகில் உள்ளவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.

எனவே பள்ளிவாசலிலோ, அல்லது பள்ளிவாசல் அல்லாத இடங்களிலோ ஜமாஅத்தாகத் தொழும் போது வெங்காயம், பூண்டு சாப்பிட்டுத் தொழக் கூடாது என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும்.


-> Q/A Ehathuvam July 06

No comments:

Post a Comment