பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

நாற்காலியில் உட்கார்ந்து தொழுவது ??

? ஒரு முஸ்லிம் தொழுவதாக இருந்தால் நின்று தொழட்டும். முடியாவிட்டால் உட்கார்ந்து தொழட்டும். முடியாவிட்டால் படுத்துத் தொழட்டும் என்ற ஹதீஸை நான் படித்துள்ளேன். ஆனால் எனக்குத் தெரிந்த சிலர் நாற்காலியில் உட்கார்ந்து தொழுவதைப் பார்க்கிறேன். அவர்கள் மிகவும் குண்டாக, தரையில் உட்கார முடியாத நிலையில் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?


எனக்கு மூல நோய் இருந்தது. ''எவ்வாறு தொழுவது?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரீ 1117

''நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி)
நூல்: தாரமீ 1536

''உட்கார்ந்து தொழ முடியாவிட்டால் படுத்துத் தொழு, அதற்கும் முடியாவிட்டால் சைகை மூலம் தொழு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். முடியாத பட்சத்தில் சைகை செய்து கூட தொழலாம் எனும் போது, தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதில் தவறில்லை என்பதை விளங்கலாம்.

எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப் படுத்த மாட்டான்.

(அல்குர்ஆன் 2:286)

-> Q/A Ehathuvam Oct 06

No comments:

Post a Comment