பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

பூகம்பம், சுனாமி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ?

? பூகம்பம், சுனாமி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மனிதர்கள் கூட்டம் கூட்டமாய் அழிகின்றனர். இவ்வாறு அழிவதெல்லாம் தண்டனையா? அல்லது சாதாரண மரணமா? சுனாமி ஏற்பட்ட போது, வெளிவந்த ஏகத்துவம் ஜனவரி 2005 இதழில், இது தண்டனை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பி.ஜே. அவர்கள் பதிலளிக்கும் போது இது தண்டனை இல்லை என்று கூறினார். இதற்கு விளக்கம் தரவும்.




பொதுவாக இயற்கைப் பேரழிவுகள் அனைத்தையும் நாம் அல்லாஹ்வின் தண்டனை என்று கூறி விட முடியாது. சில மக்கள் வரம்பு மீறிச் செல்லும் போது, அல்லாஹ் அவர்களைத் தண்டித்து அதன் மூலம் மற்ற மக்களுக்குப் படிப்பினையை ஏற்படுத்தலாம். ஆனால் அந்த அழிவு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட தண்டனை தான் என்பதை உறுதிப் படுத்துவதற்கு நம்மிடம் எந்தச் சான்றும் இல்லை.

இறைத் தூதர்கள் இருக்கும் போது, ஒரு சமுதாயத்தை அல்லாஹ் அழிக்கின்றான் என்றால் அதை அந்த இறைத் தூதர் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் ஒரு சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக அல்லாஹ் அழிப்பதாக இருந்தால் அந்தச் சமுதாயத்திற்கு ஓர் இறைத் தூதரை அனுப்பாமல் அழிப்பதில்லை.

எந்த ஊரையும் எச்சரிக்கை செய்வோர் இல்லாமல் நாம் அழித்ததில்லை. (அல்குர்ஆன் 26:208)

எனவே இது போன்ற இயற்கைப் பேரழிவுகளை அல்லாஹ்வின் தண்டனை என்று சொல்ல முடியாது. படிப்பினை பெறுவதற்காக அல்லாஹ் ஏற்படுத்தும் சோதனை என்று வேண்டுமானால் கூறலாம்.

ஒரு மனிதன் முழுக்க முழுக்க பாவத்தில் ஈடுபட்டு, அநியாயங்கள் செய்து கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு ஒரு பாதிப்பு ஏற்படும் போது, இறைவன் அவனுக்குத் தண்டனை கொடுத்து விட்டான் என்று எண்ணுவது இயல்பு.

இந்த அடிப்படையில் தான் சுனாமி ஏற்பட்ட போது, அது அல்லாஹ்வின் சோதனை என்ற கருத்தில் ஏகத்துவத்தில் நாம் எழுதியிருந்தோம்.

நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகளை பூகம்பம், புயல், வெள்ளப்பெருக்கு, எரிமலை வெடிப்பின் மூலம் சோதிக்கின்றான். நம்மைச் சுற்றியுள்ள ஊர்களில் நடந்த சோதனைகள் மூலம் அல்லாஹ் நமக்குப் பாடம் படித்துத் தருகின்றான் என்று விளங்கிக் கொண்டு நாம் தீமைகளிலிருந்து விலக வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான்.

(ஏகத்துவம் லி ஜனவரி 2005)

இது போன்ற அழிவுகளின் மூலம் நாம் பாவங்களிலிருந்து விலகி, திருந்தி வாழ வேண்டும் என்பதை மையப்படுத்தி இவ்வாறு எழுதி இருந்தோம். எனினும் அதில் சில இடங்களில் அல்லாஹ்வின் தண்டனை என்று குறிப்பிட்டதற்குப் பதிலாக சோதனை என்று குறிப்பிட்டு இருந்தால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்காது.

-> Q/A Ehathuvam June 06

No comments:

Post a Comment