பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 13, 2010

களாத் தொழுகை உண்டா


பதில் :

தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا(103)4

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

அல்குர்ஆன் (4 : 103)

தொழுகையை பிற்படுத்துவது தீயவர்களின் செயல் என்றும் கடமையான தொழுகைகளைக் குறிக்கப்பட்ட நேரத்திலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

1027 حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ ح و حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَا حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيتُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِي قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ وَلَمْ يَذْكُرْ خَلَفٌ عَنْ وَقْتِهَا رواه مسلم

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்கள். நான் "(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்'' என்று கூறினார்கள்.

முஸ்லிம் (1340)

தொழுகைகளை அவற்றுக்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதையே அல்லாஹ் விரும்புகிறான்.

528حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي رواه البخاري

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள்.

புகாரி( 527)

எனவே தொழுகைகளை அவற்றுக்குரிய நேரங்களில் தொழுவதற்கே நாம் முயற்சிக்க வேண்டும். நமது சக்திக்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாது சில காரணங்களுக்காக மட்டும் நேரம் தவறி விடுபடட்ட தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது.

1103 و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَسِيَ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا رواه مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்து விட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (1217)

தூக்கமும் மறதியும் நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களாக உள்ளன. எனவே இந்தக் காரணங்களுக்காக மட்டும் ஞாபகம் வந்தவுடன் தொழுவதற்கு அதாவது களா செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள். உறக்கத்துக்கும் மறதிக்கும் மட்டுமே இந்தப் பரிகாரம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டால் அவர் அத்தொழுகையை களாச் செய்ய முடியாது. அப்படி செய்தாலும் அவர் செய்த குற்றத்துக்கு இது பரிகாரம் ஆக முடியாது. மாறாக அவர் தொழுகையை விட்ட குற்றத்துக்குரியவர். இக்குற்றம் அடுத்து நம்மிடத்தில் ஏற்படாதவாறு கவனமாக இருக்க வேண்டும். மேலும் இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.

தூக்கமும் மறதியும் ஒருவருக்கு தினமும் ஏற்படாது. அப்படி ஏற்படும் வகையில் நாம் நடந்துகொள்ளக் கூடாது. எனவே தொழுகையை முறைப்படி நிறைவேற்றினால் தினமும் களாச் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.

இது குறித்து திருக்குர் ஆன் தமிழக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ளதையும் வாசிக்கவும் 369 களாத்தொழுகை

************************************************************************

369. களாத் தொழுகை


இவ்வசனத்தில் (19:60) தொழுகையை விட்டவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றிக் கூறப்படுகிறது.

பல வருடங்கள், பல மாதங்கள் தொழுகையை விட்டவர்கள் திடீரென்று திருந்தி வாழ விரும்புவார்கள். இவர்கள் விட்டு விட்ட பல வருடங்களின் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா? அல்லது வேறு என்ன செய்ய வேண்டும் தொழுகையைப் பாழாக்கியவர்கள் திருந்தி பாவமன்னிப்புக் கேட்டு இனிமேல் முறையாகத் தொழுது வந்தால் அதுவே போதுமானது என இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. விட்ட தொழுகைகளைக் களாச் செய்ய வேண்டும் எனக் கூறப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறு கட்டளையிடவில்லை.

எனவே அவர்கள் தவ்பாச் செய்து விட்டு எதிர்காலத்தில் சரியாக நடந்து கொண்டால் போதுமானது.

20 வருடங்களாகத் தொழாத ஒருவர் திருந்தும் போது விட்ட 20 வருடத் தொழுகையையும் நிறைவேற்ற வேண்டும் என்று எந்தச் சான்றுமின்றி கூறும் போது அவர் வந்த வழியே திரும்பிச் சென்று விடுவதை நாம் காண்கிறோம். எனவே மார்க்கத்தில் இல்லாத இது போன்ற தீர்ப்புகள் அளிப்பதைத் தவிர்த்தால் திருந்த விரும்புவோருக்கு அது எளிதாக இருக்கும்.

No comments:

Post a Comment