பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, July 24, 2010

அல்லாஹ் ஏன் பேசாமல் இருக்கிறான்?

? அல்லாஹ் அழகாகப் பேசுபவன்; அவன் படைத்த அனைத்தையும் பேசுபவையாகவே படைத்துள்ளான். அப்படியிருந்தும் அவன் ஏன் பேசாமல் இருக்கிறான்?


அல்லாஹ் இந்த உலகில் மனிதர்களிடம் பேசுவதாக இருந்தால் மூன்று வழிகளைத் தவிர வேறு வழிகளில் பேசுவதில்லை. மறுமையில் தான் மனிதர்களிடம் நேரடியாகப் பேசுவான்.

வஹீயின் மூலமோ, திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்42:51)

அல்லாஹ் மனிதர்களிடம் மூன்று வழிகளில் தான் பேசுவான் என்று இவ்வசனம் தெளிவாகக் கூறுகின்றது. அவை: 1. வஹீயின் மூலம் 2. திரைக்கு அப்பால் இருந்து 3. ஒரு தூதரை அனுப்பி.

இந்த வழிகளில் நேரடியாக பேசுவதைப் பற்றி கூறாததிலிருந்து அல்லாஹ் அவ்வழியை அடைத்து விட்டான் என்பதை விளங்கலாம்.

ஒரு வாதத்திற்கு அல்லாஹ் எல்லா மனிதர்களிடமும் பேசுவான் என்று வைத்துக் கொண்டால் அதனால் உலகில் பல்வேறு குழப்பங்களும். சிக்கல்களும் உருவாகி விடும்.

உங்க ளிடம் ஒருவர் கடன் வாங்கி விட்டு, 'இந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று அல்லாஹ் என்னிடம் சொன்னான்; அதனால் நான் திருப்பித் தர மாட்டேன்' என்று கூற முடியும்.

இந்தக் கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

பல்வேறு பித்தலாட்டங்களைச் செய்வோர் அதைக் கடவுள் சொன்னதாகக் கூறி நியாயப்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். சாமி தன்னிடம் பேசுவதாகச் சொல்லி கோடிக் கணக்கில் சம்பாதிப்பவர் களையும், சாமி சொன்னதாகச் சொல்லி நரபலி போன்ற கொடுமைகளைச் செய்யும் மூடர்களையும் நாம் கண்டு வருகிறோம்.

கடவுள் எல்லா மனிதர்களிடம் நேரடியாகப் பேசுவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் இதைச் சொல்லி எளிதில் ஏமாற்றி விட முடியும்; அவர்களைச் சுரண்ட முடியும். போலிலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் இந்த நம்பிக்கை தான் அடிப்படை.

எனவே இது போன்ற காரணங்களால் இறைவன் இந்த உலகில் மனிதர்களிடம் பேசுவதெற்கென்று சில வழிமுறைகளை வைத்துள்ளான். அந்த வழிகளில் மட்டுமே தனது தூதர்களிடம் கூட அல்லாஹ் பேசுகின்றான்.

மறுமையில் அல்லாஹ் மனிதர்களுடன் பேசுவான் என்பதற்கு குர்ஆன், ஹதீஸில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

--> Q/A Ehathuvam Jan 07

No comments:

Post a Comment