பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்கார்ந்து விட்டு??

? ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்கார்ந்து விட்டு இரண்டாம் ரக்அத்திற்காக நாம் எழுகின்றோம். ஆனால் உட்காராமல் எழுவதற்கும் ஹதீஸில் ஆதாரம் உள்ளது என்று ஒரு சகோதரர் கூறுகின்றார். இது சரியா ?நபி (ஸல்) அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்காராமல் நிலைக்கு வர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)
நூல்: புகாரீ 823

இந்த ஹதீஸின் அடிப்படையில் தொழுகையில் ஒற்றையான ரக்அத்தை முடித்து விட்டு எழும் போது உட்கார்ந்து எழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் உட்காராமல் எழுந்தார்கள் என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான அறிவிப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, ஸமிஅல்லாஹ், ரப்பனா வலகல் ஹம்து என்று சொல்லி தன் இரு கைகளையும் உயர்த்தினார்கள். பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தா செய்தார்கள். ஸஜ்தா செய்யும் போது அவர்கள் தன்னுடைய இரு உள்ளங்கைகள், தன் இரு முட்டுக்கள், தன்னுடைய இரு பாதங்கள், நுனிகள் ஆகியவற்றின் மீது ஆதாரமாக அமைந்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி தனது பித்தட்டை தரையில் வைத்து அமர்ந்தார்கள். தன்னுடைய இன்னொரு காலை நட்டி வைத்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி தனது பித்தட்டை தரையில் வைக்காமல் நிலைக்கு வந்தார்கள். இரண்டு ரக்அத்கள் முடிந்த பிறகு உட்கார்ந்தார்கள். இறுதியாக அவர்கள் நிலைக்கு எழுந்து வர விரும்பிய போது தக்பீர் கூறிக் கொண்டு எழுந்தார்கள். பிறகு மற்ற இரண்டு ரக்அத்களை தொழுதார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி)
நூல்: அபூதாவூத் 627, 824

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஈஸா பின் அப்துல்லாஹ் பின் மாலிக் என்பவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.

ஒற்றையான ரக்அத்தை முடித்து விட்டு எழும் போது நபி (ஸல்) அவர்கள் உட்காராமல் எழ மாட்டார்கள் என்று இடம் பெறும் ஹதீஸ்கள் மிகவும் ஆதாரப் பூர்வமானவை. எனவே இதன் அடிப்படையில் அமர்ந்து விட்டு எழுவது தான் நபிவழியாகும்.

--Q/A Ehathuvam May 06

No comments:

Post a Comment