ஆதம் நபிக்கு ஃபஜர் தொழுகையும், இப்ராஹிம் நபிக்கு ளுஹர் தொழுகையும், தாவூத் நபிக்கு அஸர் தொழுகையும், ஈசா நபிக்கு மஃரீப் தொழுகையும், யூசும் நபிக்கு இஷா தொழுகையும் என இந்த ஐந்து நபிகளுக்கு மட்டும் ஏன் தனித்தனி தொழுகைகளை இறைவன் கொடுத்தான். மற்ற நபிமார்களுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை?
! நீங்கள் சுட்டிக்காட்டுவது போல் அல்லாஹ்வும் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. ஐந்து வேளைத் தொழுகையும் நமக்குக் கடமையாக்கப்பட்டதாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
ஷாஃபி மத்ஹபின் நூலாகிய ஃபத்ஹுல் முயீன் (1/118) ஹனபி மத்ஹபின் நூலாகிய துர்ருல் முக்தார் (1/351) போன்ற நூல்களில் எவ்வித ஆதார மும் இல்லாமல் நீங்கள் சுட்டிக்காட்டும் செய்தியை எழுதி வைத்துள்ளனர். ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒவ்வொரு தொழுகை கடமையாக்கப்பட்டது என்று கூறுவதாக இருந்தால் அதை அல் லாஹ்வோ அவனது தூதரோ சொல்லாமல் யாராலும் அறிந்து கொள்ள முடியாது. எனவே இது போன்ற கட்டுக்கதைகளை நம்பவேண்டாம். நீங்கள் கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
No comments:
Post a Comment