குர்ஆனுக்கு முரன்படும் செய்தி 'ஹதீஸ்' ஆகிவிடுமா?
நபிகளாரின் பொன்மொழிகள் என சொல்லப்படுபவை யாவும் அல் குர்ஆனுக்கு விளக்கமாகவோ அல்லது நெருக்கமாகவோ இருந்தால்தான் அது நம்பகமான ஹதீஸ் எனும் நிலையை அடையும் அவ்வாறில்லாவிட்டால் அந்த செய்தியை அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் 'ஹதீஸ்' என ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது தவ்ஹீத் ஜமாத்தின் நிலையாகும்.
இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நவீன சலஃபிகள் தவ்ஹீத் ஜமாத்தினரை ஹதீஸ் மறுப்பாளர்கள் எனவும் காஃபிர்கள் எனவும் முத்திரைப் பதிக்கின்றனர்.
மறுக்கப்படும் செய்திகள் குறித்து இவர்களுக்கு நாம் பதில் சொல்வதைவிட இவர்களால் போற்றப்படும் மாமேதை இமாம் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களின் விளக்கத்தை முன்வைக்கிறோம்.
تاريخ أبي زرعة الدمشقي (ص 20)
حدنا أبو زرعة قال: حدثني هشام قال حدثنا الهيثم بن عمران قال سمير الأوزاعي، وسأله منيب فقال أكل ما جاءنا عن النبي صلى الله عليه وسلم لف الله فقال تقبل منه ما صدق كتاب الله عز وجل، فهو منه، وما خالفه فليس من مارك قال له منيب: إن الثقات جاؤوا به. قال: فإن كان الثقات حملوه عن غير الثقات
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?" என்று முனீப் என்பவர் அவ்ஸாயி அவர்களிடம் கேட்டார். அதற்கு அவ்ஸாயீ அவர்கள், "அந்தச் செய்திகளில் அல்லாஹ்வுடைய வேதம் எதை உண்மைப்படுத்துகின்றதோ அதை ஏற்றுக்கொள்வோம். அதுவே நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்ததாகும்.
அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக வரும் செய்திகள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து வந்தவை அல்ல" என்று கூறினார்கள். முனீப் அவர்கள், "அந்தச் செய்திகளை நம்பகமானவர்கள் அறிவித்திருக்கின்றார்களே" என்று கேட்டார். அதற்கு அவ்ஸாயீ, நம்பகமானவர்கள் நம்பகம் அல்லாதவர்களிடமிருந்து அதை அறிவித்திருக்கலாமே என்று கூறினார்கள்.
(நூல்: தாரீகு அபீ சுர்ஆ, பாகம் 1, பக்கம் 271)
ஹதீஸ் எனும் பெயரில் ஒரு செய்தியை நம்பகமானவர்கள் அறிவித்திருந்தாலும் அது குரானுக்கு முரணாக இருந்தால் அது ஹதீஸ் ஆகாது என்று நல்ல ஸலஃபியான இமாம் அவ்ஸாயி (ரஹ்) அவர்களின் கூற்றுக்கு நவீன ஸலஃபிகள் என்ன பதில் கூறப்போகிறார்கள்!
அவரையும் காஃபிர் என்று சொல்லிவிடுவார்களா!
அல்லாஹ்தான் இந்த நவீன சலஃபிகளுக்கு நல்லுணர்வு தரவேண்டும்.
குறிப்பு: ஹதீஸ்களின் பெயரால் ஒரு சில போலி செய்திகள் புகுத்தப்பட்டாலும் அதைக் குரானுடன் உரசிப்பார்த்து தரம்பிரிக்கும் அழகிய வழிமுறையானது நாமாக சுயமாக கண்டுபிடித்ததல்ல.
அது குரான் கற்றுத்தந்த வழிமுறை.நபிகளார் காட்டித்தந்த வழிமுறை.நமது முன்னோர்களில் ஸஹாபாக்கள்,அவர்களிடமிருந்து பயின்றவர்கள் ,அதற்குப் பின் வந்த கண்ணியமிக்க ஆய்வாளர்கள், குரான் விரிவுரையாளர்கள் ஹதீஸ் கலை மேதைகள் கடைபிடித்து வந்த நடைமுறைதான் இது என்பதை உணர்த்தவே இதைப் பதிவுசெய்கிறோம்.
இன்னும் ஏராளானமான சான்றுகள் தேவைப்பட்டால் தவ்ஹீத் ஜமாத் சார்பில் வெளியிடப்பட்ட *தூய குர் ஆனுக்கு தூதர் சொல் முரண்படுமா* என்ற நூலை வாங்கிப்பாருங்கள்.
-ஆதமின் மகன்
மேலும் பார்க்க...
தஜ்ஜால் ஹதீஸ் குறித்து பேரறிஞர்.இமாம் உஸைமின் அவர்களின் விமர்சனம்
https://www.facebook.com/share/p/UT3BVcCe7fzjYyZD/?mibextid=oFDknk
No comments:
Post a Comment