பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, September 21, 2025

உங்களின்_நிலைப்பாடுதான்_என்ன


#உங்களின்_நிலைப்பாடுதான்_என்ன?

"ஒரு செய்தி அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் அது #குரானுக்கு முரண்பட்டாலும் #முத்தவாத்திரான ஹதீஸுக்கு முரன்பட்டாலும் அல்லது மிக #நம்பகமான ஹதீஸுக்கு முரன்பட்டாலும் அதை ஏற்பேன்" என்பதுதான் நவீன ஸலஃப் தரப்பினரின் நிலையா? என்பதை சொல்லுங்கள்.

கண்ணேறு,

நபிகளாருக்கு சூனியம்,

 6 மாத சூனிய பாதிப்பு,

பருவ வயதை அடைந்தவருக்கு பாலூட்டுதல்,

நபிகளாருக்கு உம்மு ஹராம் அவர்கள் பேன் பார்த்ததாக வரும் செய்தி,

சில சூராக்களை சில நபித்தோழர்கள் மறுத்தது,

சிலவற்றை நபித்தோழர் சூராவாக சேர்க்க்ச் சொன்னது,

நபிகளார் தற்கொலைக்கு முயன்றார்களா,

அபுலஹபின் விரலை நரகம் தீண்டாதா,

குரங்கு விபச்சாரம்,

நெருப்பை ஊதும் பல்லி,

உலகம் படைக்கப்பட்டது 7 நாளிலா, 

காணாமல் போன 2 வசனங்கள்,

சுலைமான் நபிக்கு மறைவான ஆற்றல்,

மூஸா நபி வானவர் அறைந்தது

 என

ஒவ்வொரு செய்தியையும் ஹதீஸா,கதையா என வாதிடுவதை விட 

ஒரு செய்தி 
குரானுக்கோ, 
முத்தவாத்திரான ஹதீஸ்களுக்கோ அல்லது பலமான ஹதீஸ்களுக்கோ முரன்பட்டால் ஏற்கக் கூடாது என்ற அளவுகோலை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா ? எனக் கேட்டுச் சொல்லுங்கள்.

அனைத்துக்கும் முடிவு கிடைத்துவிடும்.

இன்ஷா அல்லாஹ்.

வல்ல ரஹ்மான் நம் அனைத்து காரியங்களையும் சீராக்குவானாக.

No comments:

Post a Comment