பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, September 19, 2025

நவீன சலஃபிகளின் இரட்டை நிலைப்பாடு!


நவீன சலஃபிகளின் இரட்டை நிலைப்பாடு!

இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்பது திருமறைக் குர்ஆனும் ஆதாரபூர்வமான நபி மொழிகள் தான் என்கிற நிலைப்பாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்கிற பேரியக்கம் கொண்டுள்ளது.

இந்த அடிப்படையில் ஆரம்ப காலம் முதல்  இந்த இயக்கம் பிரச்சாரம் செய்து வருகிறது ஆனால் இந்த இயக்கத்தில் உள்ளவர்களை எதிர்ப்பவர்கள் ,சாடுபவர்கள், இவர்கள் மீது பிரதான குற்றச்சாட்டுகளாக வைக்கக்கூடியவைகளில் ஒன்று,

இவர்கள் ஹதீஸை மறுக்கும் வழிகேடர்கள் என்பதாகும். 

பொதுவாக தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களாக இருக்கட்டும் ,அவர்களது நிர்வாகிகளாக  இருக்கட்டும் அவர்கள் எந்த ஒரு ஹதீஸையும் ஆதாரப்பூர்வமானது எனவும் அது குர்ஆனுக்கு உடன்பட்டது எனவும் தெளிவாக அறிந்துவிட்டால் அதை அமல்படுத்துவதற்கும் அதன்படி செயல்படுத்துவதற்கும்தான் முனைப்பு காட்டுகிறார்கள் .

இரவுத்தொழுகை,எளிய திருமணம்,ஸஹர் நேரத்தில் பாங்கு,திடலில் பெருநாள் தொழுகை என ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.

ஆதாரப்பூர்வமான செய்தி அது குர்ஆனுக்கு உடன்பட்ட செய்தான் என்று தெரிந்தும்  அதை சகட்டுமேனிக்கு மறுக்கக்கூடிய அஹ்லே குரான், ரஷாத் கலீபாவை தூதராக ஏற்ற  சப்மீட்டர்ஸ்(சரனடைந்தோர் சங்கம்) பிரிவினர் போன்றவர்களைப் போல் ஹதீஸ்களை குருட்டுத்தனமாக மறுப்பவர்கள் கிடையாது.

அது மட்டுமில்லாமல் மேற்படி இரண்டு வழிகெட்ட கூட்டத்தார்களுக்கு எதிராக அவர்கள் ஹதீஸை மறுப்பதால் அவர்களுக்கு எதிராக விவாத களங்களையும் சந்தித்து குரானுடன் ஹதீஸையும் பின்பற்றவேண்டும் என வாதிட்டவர்கள் தான் இந்தத் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்
நிலைமை இப்படி இருக்கையில், இவர்கள் ஹதீஸை மறுப்பவர்கள் என்று இவர்கள் மீது நவீன சலஃபிகள் கூறும் குற்றச்சாட்டு நியாயமானதுதானா என்பதை அலசி ஆராயக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அதில் ஒரு சில தகவல்களை மிக சுருக்கமாக நாம் எடுத்து வைக்கிறோம் .

ஒரு செய்தியை அல்லாஹ்வின் தூதரோடு சம்பந்தப்படுத்தி அதை ஹதீஸ் என்று சொல்வார்களேயானால் அது குர்ஆனுக்கு ஒத்துப்போகும் நிலையிலும் மனித குலத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் நிலையிலும் அது இருக்க வேண்டும். ஆனால் அந்த செய்தி குர்ஆனுக்கு மாற்றமாக ,மனித குலத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருந்தால் இது கண்டிப்பாக ஹதீஸாக இருக்காது. அது ஹதீஸ் என்ற பெயரால் ஏதோ கலங்கடிக்கப்பட்டுள்ளது என்கிற நல்ல எண்ணத்தில் தான் அந்த செய்திகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள் .

இந்தப் போங்கு ஒரு செய்தியை அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அது குர்ஆனுக்கு முரணாகவோ மற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸுகளுக்கு முரணாகவோ இருக்கும் பட்சத்தில் அது குறித்து அச்சப்படுவதோ அதை ஏற்பதில் சற்று தயங்குவதோ ஒரு நேர்மையான அறிஞர்களின் பண்பே தவிர இது வழிகேட்டின் அடையாளம் அல்ல.

இதற்கு ஒரு உதாரணமாக நாம் சில தகவல்களை நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறோம் .

ஒரு செய்தி குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்க்கும் வகையில் இருந்தால் அதை மறுப்பது நியாயம் என்பதை ஏற்றுக்கொள்ளாத இவர்கள் ,எந்த செய்தியாக இருந்தாலும் அது குர்ஆனுக்கு முரணாக தென்பட்டாலும் இஸ்லாத்தின் அடிப்படையே தகர்க்கும் படி தென்பட்டாலும் அறிப்பாளர் தொடர் சரியாக இருந்துவிட்டால் அதை ஹதீஸ் எனக் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று சொல்லும் இவர்களுக்கு மார்க்க அறிஞர் உஸைமின் பெரும் சவாலாக இருக்கிறார். 

உதாரணத்திற்கு ....

தஜ்ஜால் தொடர்பாக தமீமுத் தாரீ(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை தற்கால அறிஞர்களில் மிகச் சிறந்த அறிஞரான உஸைமீன் அவர்கள் மறுத்துள்ளார்கள்.
مجموع فتاوى ورسائل ابن عثيمين (2/ 20)
فأجاب بقوله : ذكرنا هذا مستدلين بما ثبت في الصحيحين ، عن النبي - صلى الله عليه وآله وسلم - ، قال : « إنه على رأس مائة سنة لا يبقى على وجه الأرض ممن هو عليها اليوم أحد » .
فإذا طبقنا هذا الحديث على حديث تميم الداري صار معارضا له ؛ لأن ظاهر حديث تميم الداري أن هذا الدجال يبقى حتى يخرج ، فيكون معارضا لهذا الحديث الثابت في الصحيحين ، وأيضا فإن سياق حديث تميم الداري في ذكر الجساسة في نفسي منه شيء
நான் அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்

(இன்றிலிருந்து) ஒரு நூறாண்டுக்குள் இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் இருக்கமாட்டார்கள்" என்று நபி(ஸல்) கூறினார்கள் என்ற முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட செய்தியை எடுத்துக் கூறி 

இந்த செய்திக்கு முரணாக தஜ்ஜால் செய்தி அமைந்துள்ளது. 

ஏனெனில், நூறாண்டுகள் கழித்து யாரும் இருக்க மாட்டார்கள் என்பதும் தஜ்ஜால் அவன் வெளிவரும் வரை வாழ்ந்துக் கொண்டிருப்பான் என்பதும் முரணாகவுள்ளது. 

அதுமட்டுமின்றி இந்த செய்தியில் இடம்பெறும் ஜஸ்ஸாஸா என்ற பிராணி தொடர்பாக எனது உள்ளத்தில் ஒரு நெருடல் உள்ளது என்று உஸைமீன் கூறியுள்ளார்.

ஜஸாஸா மற்றும் தஜ்ஜாலின் உயிர் வாழ்க்கை தொடர்பாக குர்ஆனுக்கு முரண் இல்லாத வகையிலும் மற்ற ஹதீஸ்களுக்கு முரண் இல்லாத வகையிலும் இந்த ஹதீஸை இலகுவாக நம்மால் புரியவும் புரிய வைக்கவும் இயலும் என்றாலும் உசைமின் அவர்களுக்கு இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்வதில் இந்த ஹதீஸில் சொல்லப்படுகிற தகவலில் ஒரு நெருடல் இருப்பதாக சொல்லிவிட்டாரே இந்த ஹதீஸை ஏற்பதில் அவருக்கு ஏற்பட்ட நெருடலை வைத்துக்கொண்டு உசைமின் அவர்களை இந்த நவீன ஸலபிகள் என்ன சொல்ல போகிறார்கள் ?

குரானுக்கு முரணாகத் தோன்றும் செய்திகளை ஹதீஸாக ஒப்புக்கொள்ளக் கூடாது என்பதில் உசைமின் அவர்கள் மட்டுமல்ல இன்னும் இவர்களால் போற்றி புகழப்பட்டு வரும் பல்வேறு இமாம்களின் நிலைப்பாடும் இதுதான் .

மேலதிக விவரங்களை அறிய

சமீபத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளியிடப்பட்ட

தூய குர் ஆனுக்கு தூதர் சொல் முரன்படுமா? என்ற நூலை வாங்கிப் படியுங்கள்.

சிந்திப்பீர்! சீர் பெறுவீர்!!

- ஆதமின் மகன்

No comments:

Post a Comment