பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்றஹீம்
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்
தமிழ்நாடு தலைஹீத் ஜமாஅத் சார்பில் "முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்"" எனும் தலைப்பில் 2026 ஜூன் ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய நான்கு மாதங்கள் பிரச்சார செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் இளைஞர்களை பொறுத்தே அதன் எதிர்காலம் அமையும் என்பார்கள். இதனால் நான் ஒவ்வொருவரும் இளைஞர்களைக் குறிவைக்கின்றனர். இன்றைய இளைஞர்களோ தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து தவறான இலக்கை நோக்கிப் பயணிக்கின்றனர், உலகிற்கு நல்ல நாகரீகத்தை கற்றுத் தந்த மார்க்கம் இஸ்லாம்.
இம்மார்க்கத்தைப் பின்பற்றும் இளைஞர்களும் தன்னிலை மறந்து தவறில் வீழ்வதே வேதனையின் உச்சம். இத்தகைய இளைஞர்களுக்கு அவர்களின் இலக்கை நினைவூட்டி அதற்கான பாதையில் பயணிக்கத் தூண்டுவதே இச்செயல்திட்டத்தின் நோக்கம்.
வலிமை வாய்ந்த வாலிபப் பருவம்
அல்லாஹ்வே உங்களைப் பலவினமாகப் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பிறகு பலத்தை அளித்தான். பிறகு பலத்திற்குப் பின்னர் பலவீனத்தையும், வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன், தான் நாடியதைப் படைக்கறான். அவன் நன்கறிந்தவன்: இற்றல் மிக்கவன்.
அல்குர்ஆன் 30:54
இவ்வசனத்தில் குழந்தை பருவத்தையும் முதுமைப் பருவத்தையும் பலவீனமான பருவம் என்று குறிப்பிடும் இறைவன் அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட இளமைப் பருவத்தைத்தான் பலமான பருவம் என்கிறான்.
ஒரு மனிதனின் இளமைப்பருவம்தான் ஆற்றல் மிகு பருவமாக இருக்கிறது. இப்பருவத்தில்தான் அவனிடம் வேகமும் எதையும் எதிர்கொள்ளும் துணிவும் இருக்கும்.
இளைஞனே இலக்கை மறவாதே!
வலிமை மிகு வாலிபர்கள் தங்களின் இலக்கு எது என்பதை அறியாமல் உள்ளனர். ஒரு முஸ்லிம் இளைஞனுக்கான முதன்மை இலக்கு மறுமை வாழ்வாகத்தான் இருக்க வேண்டும்.
இப்னு அப்பாஸ் எனும் இளைஞருக்கு இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறிய அறிவுரை இதோ.
ஒரு நாள் நான் நபி(ஸல) அவர்களுக்கு பின்னால் இருந்தேன். அப்போது அவர்கள், சிறுவனே! உனக்கு நான் சில சொற்களைக் கற்றுத் தருகிறேன்.
நீஅல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான, அல்லாஹ்வின் வீஷயத்தில் நீ பேணுதலாக இரு அல்லாஹ்வைக் கண்முன்னே பெற்றுக் கொள்வாய்! நீ (எதையேனும்) கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்! நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் உதவித் தேடு
அறிந்து கொள்! அனைவரும் ஒன்று சேர்ந்து உணக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் எந்த நன்மையையும் உனக்கு செய்ய முடியாது. அனைவரும் சேர்ந்து உனக்கொரு தீலையைச் செய்ய நாஜனால் அல்லாகத் நாடியதைத் தவிர எந்த தீமையையும் அவர்களால் செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: தர்தை 2440
அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இருந்தால் தான் இறைவனின் பாதுகாப்பையும், உதவியையும் நம்மால் பெற முடியும் என்பதுவே இந்நபிமொழி நவிழும் நற்கருத்தாகும். ஆனால் இத்தகைய பேணுதல் இல்லாதவர்களாக, இலக்கை மறந்தவர்களாக இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் செயல்படுகின்றனர்.
ஷைத்தானின் வலையில் சிக்காதீர்
நமது இலக்கை மறக்கடித்து நரகை நமக்கு பரிசாக்குவதே ஷைத்தானின் இலக்காகும். அதற்காக அவன் இன்றைய உலகில் பல மாயவலைகளை விரித்துள்ளான். அதில் ஒன்று செல்ஃபோன் எனலாம்.
செல்ஃபோன்களும் சமூக வலைதளங்களும்தான் இன்றைய இளைஞர்களின் வார்த்தையையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இணையச் சிறையில் பனையக கைதிகளாக இன்றைய இளைஞர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.
ஃபலஸ்தீன மக்களின் அழுகுரலும் வட இந்திய மக்களின் அவலமும் இளைஞர்களின் செவிப்பறைகளைத் தட்டுவதில்லை. தன் சமூகம் வஞ்சிக்கப்படுவதையும் அநீதிக்குள்ளாக்கப்படுவதையும் அறிந்து கொள்ள முனைவதில்லை.
மாறாக சினிமா நடிகர்களின் எதிர்காலம் என்ன? ஒற்றுமையாய் ரீலஸ் போட்ட ரியல் ஜோடிகளுக்கு என்ன பிரச்சனை? இவர்களது vlog பார்த்தால் நான் எனக்கு மனம் அமைதி அடைகிறது!!
இந்த வார ட்ரோல் மெட்டிரியல் யார்? என இணையத்தை சுற்றியே இளைஞர்களின் உலகம் இருக்கிறது. இதை மாற்றி அமைத்து இம்மாய் உலகை
விட்டு பிரிந்து மறுஉலகப் பயணத்திற்காக உழைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.
மேலும், போதைப் பொருள் அருந்தி பாதையில் வழிமறித்து நிற்பதே நமது தைரியத்திற்கு எடுத்துக்காட்டு பைக்கை வேகமாக ஓட்டினால் தான் நாம் யூத் கேர்ள் பிரண்ட் பாய் பிரண்ட் இல்லாதவர்களின் வாழ்க்கையே வீண் இதுபோன்ற காரியங்களை இளமையின் துணிவு என நினைத்துக் கொண்டு தங்களையே ஏமாற்றிக் கொண்டு இளைஞர் பட்டாளம் ஊர்கள் தோறும் வட்டமடிக்கிறது. இத்தகைய தீய காரியங்கள்தான் தங்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்கிறது என நினைக்கும் இளைஞர்களே!
எது தங்களுக்கு மன அமைதியையும், எதையோ சாதித்த மகிழ்ச்சியையும் தருவதாக இளைஞர்கள் எண்ணுகிறார்களோ அது தான் அவர்களது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடானது. இதை புரிந்துக் கொள்ள முடியாதவாறு நாம் இணைய உலகத்தால் முட்டாளக்கப்பட்டுள்ளோம்.
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
புகாரி 6133
தனக்கு பாதிப்பு என்று தெரிந்தும் அதில் வீழ்வது இறைநம்பிக்கையாளர்களின் பண்பல்ல. எனவே, ஷைத்தான் விரித்துள்ள இதுபோன்ற மாய வலைகளில் இளைஞர்கள் சிக்கிவிடக்கூடாது.
"என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் வீட்டு விட்டதால்.
மயியில் (தீயவற்றை) அவர்களுக்கு
அலங்கரித்துக் காட்டுவேன்.அவர்களில் தேர்வு செய்யப்பட்ட உண் அவயார்களைத் தவிர அனைவரையும் வழிகெருப்பேன்" என்று (இப்லீஸ்) கூறினான்.
அல்குர்ஆன் 15:39,40
விமர்சனத்திற்கு கலங்காதே!
சரியான வழியில் பயணிக்க வேண்டும் என்ற
சிந்தனை இருந்தும் பல இளைஞர்கள் அதற்கு முன்வராமல் இருக்க காரணமே தன்னுடன் இருப்பவன் தன்னை கிண்டல் செய்வான் என்பதே!
வீட்டிற்கு பயந்தவன் என்றும் பழம் என்றும் இளைஞர்களின் வழக்காடு சொற்களால் தன்னை வசைபாடுவார்கள் என்று ஒரு இளைஞன் எண்ணுகிறான்.
இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களில் எவரும் தலது மார்க்கத்தை விட்டும் தடம் மாறிவிட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான் அவர்களும் அவனை தேசப்பார்கள்.
அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் இறைமறுப்பாளர்களிடம் கருமையாகவும் பணிவாகவும், இருப்பார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்.
பழப்போரின் பழிப்புக்கு அஞ்ச மாட்டார்கள். இது அல்லாவின் அருளாகும். தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அல்லாகம் வின்லமானவன்
நன்கறிந்தவன்.
அல்குர்ஆன்: 5.54
நாம் சரியான வழியில் நடக்கும் போது அதை பிறர் கேலி செய்தால் அதை நாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை.படிக்கும் காலத்தில் படிக்காதவர்களும் ஒழுக்கமாக வாழாதவர்களும் அதன் பாதிப்பை பிறகு உணரும் போது கலங்கி நிற்பதையும் அப்போதே சரியாக இருந்திருக்க வேண்டும் என்று கடந்த காலத்தை எண்ணி கண்ணீர் வடிப்பதையும் நிதர்சனமாகக் காண்கிறோம்.
அந்த நேரத்தில் நல்லதை செய்யவிடாமல் தடுத்த
யாரும் வந்து நமக்கு உதவ போவதில்லை.மறுமையிலும் இதே நிலைதான், மனிதர்களின் கேலி கிண்டலுக்காக நல்லதை விட்டு வீணானதை செய்துவந்தால் அது
நம்மை நரசில் சேர்க்கும். அந்நேரத்தில் எவராலும் நம்மைக்
காப்பாற்ற இயலாது.
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்.
தனது இளமைப் பருவம் துடிப்பானதாக இருப்பினும் அதை தீய வழியில் பயன்படுத்தாமல் நல்வழியில் பயன்படுத்துவோராக நபிமார்களும் நல்லவர்களும் செயலாற்றியுள்ளார்கள்.
இளமைப் பருவத்தில் இப்ராஹீம் நபியின் பிரச்சாரம், இஸ்மாயீல் நபியின் இறைக்கட்டுப்பாடு, யூசுஃப் நபியின் கற்பொழுக்கம், நபிகளாரின் நேர்மை போன்றவற்றை இன்றைய இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
தவறான வழியில் பயணித்து வழிகெட்டுவிடாமல் சத்தியப்
பாதையை நோக்கித் திரும்புபவர்களாக
இன்றைய இளைஞர்கள் திகழ வேண்டும். இறைவன் இந்த நிலையை ஏற்படுத்த போதுமானவன்.
வெளியீடு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தேனி மாவட்டம் , கம்பம் கிளை . தொடர்புக்கு : - 72001 33354 , 98656 57298 .
No comments:
Post a Comment