பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, February 13, 2019

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையோர் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களே? அதன் நிலை என்ன?

இப்னு ஜமீலா, முகவை.

கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையவர்கள் சில ஹதீஸ்களை எடுத்துக்காட்டி நியாயப்படுத்துகின்றனர். ஆனால் அவை சரியான ஹதீஸ்கள் அல்ல. அது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

ஆதாரம்: 1

5478 – أخبرنا الشيخ أبو بكر بن إسحاق أنا بشر بن موسى ثنا أبو عبد الرحمن المقري ثنا ابن لهيعة : قال : حدثني أبو هبيرة عن حبيب بن مسملة الفهري و كان مجاب الدعوة أنه أمر على جيش فدرب الدروب فلما أتى العدو قال : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول لا يجتمع ملأ فيدعو بعضهم و يؤمن البعض إلا أجابهم الله ثم إنه حمد الله و أثنى عليه ثم قال : اللهم احقن دمائنا و اجعل أجورنا الشهداء فبينما هم على ذلك إذ نزل الهنباط أمير العدو فدخل على حبيب سرادقه

ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய, மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹபீப் பின் மஸ்லமா (ரலி)

நூல்: ஹாகிம்

இதே செய்தி இமாம் தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3456- حدثنا بشر بن موسى ، حدثنا أبو عبد الرحمن المقرئ ، حدثنا ابن لهيعة ، حدثني ابن هبيرة ، عن حبيب بن مسلمة الفهري وكان مستجابا أنه أمر على جيش فدرب الدروب ، فلما لقي العدو ، قال للناس : سمعت رسول الله صلى الله عليه وسلم ، يقول : لا يجتمع ملأ فيدعو بعضهم ويؤمن سائرهم إلا أجابهم الله  ، ثم إنه حمد الله وأثنى عليه ، فقال : اللهم احقن دماءنا واجعل أجورنا أجور الشهداء ، فبينا هم على ذلك إذ نزل الهنباط أمير العدو ، فدخل على حبيب سرادقه ، قال أبو القاسم : الهنباط بالرومية صاحب الجيش. المعجم الكبير للطبراني

இந்த இரண்டு நூற்களிலும் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் மூன்றாவது அறிவிப்பாளராக இப்னு லஹீஆ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவருடைய புத்தகங்கள் எரிந்து விட்டதால் இவரது மனனத்தன்மை பாதிக்கப்பட்டது என்பதே இவரது பலவீனத்துக்குக் காரணம்.

எனவே இவருடைய நூல் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கலாம். இதற்குப் பிறகு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

قال أبو حاتم بن حبان البستي: كان من أصحابنا يقولون: سماع من سمع من ابن لهيعة قبل احتراق كتبه مثل العبادلة: ابن المبارك، وابن وهب، والمقرئ، وعبد الله بن مسلمة القعنبي، فسماعهم صحيح ومن سمع بعد احتراق كتبه فسماعه ليس بشئ.- سير أعلام النبلاء – الذهبي

இப்னு லஹீஆவிடமிருந்து இப்னுல் முபாரக், இப்னு வஹப், அல்முக்ரிஉ அப்துல்லாஹ் பின் மஸ்லமா ஆகியோர், அறிவித்த அறிவிப்புகள் தரமானவை. அவரது நூல்கள் எரிந்துபோன பின் அவர் வழியாக அறிவிக்கப்படுபவை பலவீனமானவை.

ஆதாரம் : சியரு அஃலாமின் நுபலா

وكان صالحا، لكنه يدلس عن الضعفاء، ثم احترقت كتبه، وكان أصحابنا يقولون: سماع من سمع منه قبل احتراق كتبه مثل العبادلة: عبدالله بن وهب، وابن المبارك، وعبد الله بن يزيد المقرئ، وعبد الله بن مسلمة القعنبى – فسماعهم صحيح. ميزان الاعتدال – الذهبي

இப்னு லஹீஆவின் புத்தகங்கள் எரிவதற்கு முன்பு அவரிடமிருந்து கேட்டவர்களின் அறிவிப்புகள் சரியானவை. உதாரணமாக அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் முபாரக் மற்றும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோரின் அறிவிப்புகள் சரியானவை.

நூல்: மீஸானுல் இஃதிதால்

وقال نعيم بن حماد سمعت بن مهدي يقول لا أعتد بشيء سمعته من حديث بن لهيعة إلا سماع بن المبارك ونحوه – وقال عبد الغني بن سعيد الأزدي إذا روى العبادلة عن بن لهيعة فهو صحيح بن المبارك وابن وهب والمقري وذكر الساجي وغيره مثله  تهذيب التهذيب – ابن حجر

இப்னு வஹப், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் இப்னு லஹீஆவின் மாணவர்கள். இம்மூவரும் இப்னு லஹீஆவிடம் ஆரம்ப நேரத்தில் செவியுற்றவர்கள் என்றும் இவர்கள் இப்னு லஹீஆவின் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

மேற்கண்ட ஹதீஸை இப்னு லஹீஆவிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ என்பவர் அறிவிக்கின்றார். இவர் இப்னு லஹீஆவின் மனனத் தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர் என்பதால் இது சரியான செய்தி என்று வாதிடுகிறார்கள்.

இந்த ஹதீஸில் இப்னு லஹீஆவின் விமர்சனத்தைத் தவிர்த்து வேறெந்த குறையும் இல்லாவிட்டால் இந்த வாதத்தைப் பரிசீலிக்கலாம். ஆனால் இச்செய்தி பலவீனம் என்பதற்கு வேறொரு குறையும் உள்ளது.

இந்த செய்தியை ஹபீப் பின் மஸ்லமா (ரலி) என்ற நபித்தோழரிடமிருந்து அபூ ஹுபைரா என்பவர் அறிவிக்கின்றார். ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 42 வது வருடத்தில் மரணிக்கிறார்கள். அபூ ஹுபைரா ஹிஜ்ரீ 41 வது வருடத்தில் தான் பிறக்கின்றார்.

وولي أرمينية لمعاوية، فمات بها سنة اثنتين وأربعين—  سير أعلام النبلاء – الذهبي

ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ நாற்பத்து இரண்டாவது வருடத்தில் மரணித்தார்கள்.

நூல்: சியரு அஃலாமின் நுபலா

قال المزي في تهذيب الكمال عبد الله بن هبيرة بن أسعد بن كهلان السبئى الحضرمى ، أبو هبيرة المصرى . اهـ. قال سعيد بن كثير بن عفير : ولد سنة الجماعة . و قال أبو سعيد بن يونس : قرأت فى بعض الكتب القديمة : أنه مات سنة ست و عشرين و مئة .

அபூ ஹுபைரா ஜமாஅத் வருடம் என்றழைக்கப்படும் ஹிஜ்ரீ 41வது வருடத்தில் பிறந்தார்.

நூல்: தஹ்தீபுல் கமால்

ஆக ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அபூ ஹுபைராவின் வயது ஒன்றாகும். எனவே அபூஹுபைரா ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை. அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகக் கேட்கவில்லை என்பது உறுதியாகின்றது.

இந்த அடிப்படையில் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதால் இந்தச் செய்தி பலவீனமாகிறது.

السنن الكبرى للنسائي

(5870) أنبأ محمد بن إبراهيم قال حدثنا الفضل بن العلاء قال حدثنا إسماعيل بن أمية عن محمد بن قيس عن أبيه أنه أخبره أن رجلا جاء زيد بن ثابت فسأله عن شئ فقال له زيد عليك أبا هريرة فإني بينما أنا وأبو هريرة وفلان في المسجد ذات يوم ندعو الله ونذكر ربنا خرج علينا رسول الله صلى الله عليه وسلم حتى جلس إلينا فسكتنا فقال عودوا للذي كنتم فيه قال زيد فدعوت أنا وصاحبي قبل أبي هريرة وجعل رسول الله صلى الله عليه وسلم يؤمن على دعائنا ثم دعا أبو هريرة فقال اللهم إني أسألك مثل ما سألك صاحباي هذان وأسألك علما لا ينسى فقال رسول الله صلى الله عليه وسلم آمين  فقال يا رسول الله ونحن نسأل الله علما لا ينسى فقال سبقكم بها الغلام الدوسي السهر في العلم

ஆதாரம்: 2

கைஸ் அல்மதனீ கூறுகிறார்:

ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலி) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறக்காத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.

உடனே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே மறக்காத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம் என்று கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார் என்றார்கள்.

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா நஸாயீ

கூட்டு துஆ ஓதலாம் என்று கூறக் கூடியவர்கள் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலான அல்இசாபா எனும் நூலில் இச்செய்தி சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார். இப்னு ஹஜர் அவர்களின் இக்கூற்றையும் மேற்கண்ட செய்தியைச் சரிகாணுபவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தங்களுடைய பித்அத்திற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்காதா என்று தேடித் திரிந்தவர்களின் கண்ணில் இச்செய்தி பட்ட மாத்திரத்தில் முழுமையான ஆய்வு செய்யாமல் அரைகுறை ஞானத்தோடு இதை ஆதாரமாகக் கருதி மக்களுக்கு மத்தியில் இச்செய்தியைப் பரப்பியும் வருகின்றனர்.

உண்மையை உணர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் செய்தியைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் இச்செய்தி பலவீனமானது என்ற முடிவுக்கே வருவார்கள்.

இமாம் ஹஜர் அவர்கள் கைஸ் அல்மதனீ இடம்பெறும் மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரை தவறுதலாக சரி என்று கூறி விட்டார்கள். இவருடைய தவறைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கூட்டு துஆவை நியாயப்படுத்துகிறார்கள்.

இந்தச் செய்தியை அறிவிக்கும் கைஸ் அல்மதனீ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களே தனது நூலான தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

قيس المدني مجهول من الثالثة س – تقريب التهذيب : ابن حجر

கைஸ் அல்மதனீ என்பவர் யாரென அறியப்படாதவர்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப்

கைஸ் அல்மதனீ என்பவர் நம்பகமானவர் என்பது உறுதி செய்யப்படவில்லை. இவர் முகவரியற்றவர் என்பதால் இவர் பலவீனமானவர். இப்படிப்பட்டவர் அறிவித்த செய்தியை கூட்டு துஆ ஓதுவதற்கு எப்படி ஆதாரமாக எடுக்க முடியும்?

இவர் நம்பகமானவர் என்று ஒரு அறிஞர் கூட சான்று அளிக்கவில்லை.

ஹைஸமீ அவர்கள் இந்த ஹதீஸைத் தமது நூலில் குறிப்பிட்டு இதில் இடம்பெறும் கைஸ் அல்மதனீ நம்பகமானவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

مجمع الزوائد ومنبع الفوائد

رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَقَيْسٌ هَذَا كَانَ قَاصَّ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ لَمْ يَرْوِ عَنْهُ غَيْرُ ابْنِهِ مُحَمَّدٍ، وَبَقِيَّةُ رِجَالِهِ ثِقَاتٌ.

இந்தச் செய்தியை தப்ரானீ பதிவு செய்துள்ளார். இதில் கைஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவரிடமிருந்து இவருடைய மகனைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதில் உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாவர்.

நூல்: மஜ்மஉ ஸவாயித்

இவரைத் தவிர உள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று ஹைஸமீ சான்றளிக்கிறார். எனவே இவர் நம்பகமானவர் இல்லை என்பது இதிலிருந்து புரிகின்றது.

திர்மிதீ நூலுக்கு விரிவுரை வழங்கிய இமாம் முபாரக் ஃபூரி, இப்னு மாஜா நூலுக்கு விரிவுரை வழங்கிய நூருத்தீன் சிந்தீ, அல்பானீ ஆகியோர் கைஸ் அல்மதனீ பலவீனமானவர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

எனவே இச்செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி பலவீனமானது என்பது நிரூபணமாகின்றது.

கூட்டு துஆ கூடாது

கூட்டு துஆ கூடாது

கடமையான தொழுகைகளுக்குப் பிறகும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் ஒருவர் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் உள்ளது. இது கூட்டு துஆ என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த வழிமுறைக்கு திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் எந்த ஆதாரமும் இல்லை.

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 7:55

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்.

திருக்குர்ஆன் 7:205

இவ்வசனங்கள் இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழிமுறையைக் கற்றுத் தருகின்றன.

ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால், அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக அல்லாஹ்விடம் பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.

பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல் யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.

மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது.

இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.

இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறைவனை எவ்வாறு நினைவு கூர வேண்டும் என்ற ஒழுங்கும் இங்கே கூறப்படுகிறது. முதலில், பணிவுடனும், அச்சத்துடனும் இறைவனை நினைவு கூர வேண்டும். இரண்டாவது, நாவால் மட்டும் இறைவனின் பெயரைக் கூறாமல் உள்ளத்திலும் நினைவு கூர வேண்டும். மூன்றாவதாக, உரத்த சப்தமின்றி நினைவு கூர வேண்டும்.

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் ராத்திபு என்ற பெயரிலும், ஹல்கா' என்ற பெயரிலும் பெரும் கூச்சலுடனும், ஆட்டம் பாட்டத்துடனும் அல்லாஹ்வை நினைவு கூர்வதாக நினைத்துக் கொண்டு பாவத்தைச் சுமந்து வருகின்றனர்.

கூட்டு துஆ கூடாது என்பது குறித்து கூடுதலாக அறிய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 192, 180 ஆகிய குறிப்புக்களைப் பார்க்கவும்.

துஆவில் கையை உயர்த்தலாமா?

கடமையான தொழுகைக்குப் பின்பு கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால்நம்மை துஆ கேட்கும் படி நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். தனது அடியான்கையை உயர்த்தி கேட்கும் போது அவனை வெறுங்கையுடன் திரும்ப அனுப்புவதற்குஅல்லாஹ் வெட்கப்படுகின்றான் என்று ஹதீஸ் உள்ளது. ஆனால் சவூதியில்கடமையான தொழுகைக்குப் பின் துஆ கேட்கும் போது கையை உயர்த்தக் கூடாது, நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை, மற்ற நேரங்களில் கையை உயர்த்தலாம்என்று கூறுகின்றார்களே? இது சரியா?

எம்.ஏ. ரிஃபாயீ

அல்கஸீம், சவூதி அரேபியா

பதில் :

நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்திபிரார்த்தித்துள்ளார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள்.ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்குவந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். பிறகு தமது கைகளை உயர்த்தி, நீண்ட நேரம்நின்று துஆச் செய்வார்கள். பின்பு இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகுஇடது பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குச் சென்று கிப்லாவை முன்னோக்கி,நீண்ட நேரம் நின்று கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு பத்னுல்வாதியிலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். "இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கின்றேன்'' என்றுகூறுவார்கள்.

நூல்: புகாரி 1751, 1753

நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி உளூச் செய்தார்கள். பிறகு தம் இருகரங்களையும் உயர்த்தி, "இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக!மறுமை நாளில் மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரைஆக்கி விடுவாயாக!'' என்று பிராத்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்களின்வெண்மையை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 6383

நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்யும் போது அவர்களது அக்குள் வெண்மை தெரியும் வரைதமது இரு கைகளையும் உயர்த்துவதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1490

தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக்கூடிய ஒரு மனிதன், "என் இறைவா! என் இறைவா!'' என்று வானத்தை நோக்கி, தனது இரு கைகளையும்நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிப்புஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன்ஹராமிலேயே மூழ்கடிக்கப் பட்டிருக்கிறான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1686

நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்திப்பிரார்த்திருப்பதையும், அவ்வாறு பிரார்த்திப்பதை அங்கீகரித்திருப் பதையும் இந்தஹதீஸ்கள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே எந்தச் சந்தர்ப்பத்திலும் கைகளை உயர்த்திப்பிரார்த்திக்கலாம் என்பதை இதன் மூலம் அறிய முடியும்.

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் செய்த, அங்கீகரித்த ஒரு விஷயத்தை ஒரு குறிப்பிட்டசந்தர்ப்பத்தில் செய்யக் கூடாது என்றால் அதற்கு நேரடியான தடை இருக்க வேண்டும்.

உதாரணமாக உபரியான நோன்புகள் எந்த நாளிலும் நோற்க மார்க்கத்தில் அனுமதிஉள்ளது. ஆனால் பெருநாட்களிலும், வெள்ளிக்கிழமைக்கென்று பிரத்தியேகமாகவும்,நோன்பு நோற்கத் தடை உள்ளது. எனவே இந்த நாட்களில் நோன்பு நோற்கக் கூடாதுஎன்று கூறலாம். அதே சமயம், இவ்வாறு குறிப்பிட்ட தடை எதையும் காட்டாமல், "நபி(ஸல்) அவர்கள் புதன் கிழமை நோன்பு நோற்றதாக ஹதீஸ் எதுவும் இல்லை, எனவேபுதன் கிழமை நோன்பு நோற்கக் கூடாது'' என்று யாரும் கூற மாட்டார்கள்.

இது போன்று தான் கைகளை உயர்த்தி துஆச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் முன்மாதிரி இருக்கும் போது, தொழுகைக்குப் பின் அவ்வாறு செய்யக் கூடாது என்றால்அதற்கு நேரடியான தடையைக் காட்ட வேண்டும். நாம் தேடிப் பார்த்த வரையில்ஹதீஸ்களில் அவ்வாறு தடை எதுவும் இல்லை. எனவே தொழுகைக்குப் பின்தாராளமாக கைகளை உயர்த்திப் பிரார்த்திக்கலாம்.

ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்

ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்

எம்.ஐ. சுலைமான்

ஹஜ் கடமையை தூய்மையான உள்ளத்துடன் நபிகளார் காட்டித்தந்த முறைப்படி நிறைவேற்றிவிட்டால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார் என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.

தூய்மையான இந்த வணக்கத்தைp பலர் விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும் செய்வதைp பார்க்க முடிகிறது. ஹஜ் பயணத்திற்கு முன்னால் விருந்தளித்தல், மாலை அணிதல், சுவரொட்டிகளில் விளம்பரம் செய்தல் என்று பல வகைகளில் விளம்பரம் செய்கின்றனர். இதன் மூலம் நன்மைகளை இழக்கிறார்கள்.

இன்னும் பல நூதனங்களையும் செய்கிறார்கள். ஹஜ் செய்தவர் வீடு திரும்பும் போது அவர் வீட்டிற்கு நுழைவதற்கு முன்னரே அவரைச் சந்தித்து அவரிடம் நமக்காக துஆச் செய்யச் சொல்ல வேண்டும் என்றும், அதனால் நிறைந்த பலன் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இதற்கு ஒரு செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

مسند أحمد بن حنبل – (2 / 69)

5371- حَدَّثَنَا عَفَّانُ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْحَارِثِيُّ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ وَصَافِحْهُ ، وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ ، فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ.

நீ ஹாஜியைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லி, அவரிடம் முஸாபஹாs செய். இன்னும் அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்னால் உனக்காக பாவமன்னிப்புத் தேடுவதற்குக் கேட்டுக் கொள். ஏனெனில், அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இருக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அஹ்மத்

இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து ஹாஜிகள் ஊர் திரும்பினால் அவரைக் கட்டாயம் சந்தித்து அவரிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

இந்தச் செய்தி அஹ்மதில் இரண்டு இடங்களில் வந்துள்ளது. அந்த இரண்டு செய்திகளிலும் முஹம்மத் பின் அப்துர்ஹ்மான் அல்பைலமானீ என்பவர் இடம்பெறுகிறார்.

இவர் நபிகளார் பெயரில் இட்டுக்கட்டி பொய்யான செய்திகளைச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர். இவரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.

تهذيب التهذيب ـ محقق – (9 / 261(

قال عثمان الدارمي عن ابن معين ليس بشئ وقال البخاري وأبو حاتم والنسائي منكر الحديث وقال البخاري وكان الحميدي يتكلم فيه لضعفه وقال أبو حاتم أيضا مضطرب الحديث.

وقال ابن عدي وكل ما يرويه ابن البيلماني فالبلاء فيه منه وإذا روى عنه محمد ابن الحارث فهما ضعيفان.

قلت: وقال ابن حبان حدث عن ابيه بنسخة شبيها بمائتي حديث كلها موضوعة لا يجوز الاحتجاج به ولا ذكره إلا على وجه التعجب وقال الساجي منكر الحديث وقال العقيلي روى عنه صالح بن عبد الجبار ومحمد بن الحارث مناكير

இவர் ஹதீஸ்துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரி, அபூஹாத்திம், நஸாயீ ஆகியோர் கூறியுள்ளனர்.

இவர் பலவீனமானவராக இருப்பதினால் ஹுமைதீ இவரை விமர்சித்துள்ளதாக புகாரி குறிப்பிடுகிறார்கள்.

இப்னுல் பைலமானீ அறிவிக்கும் செய்தியில் ஏதாவது பிரச்சனை என்றால் அது இவராகத் தான் இருக்கும். இவரிடமிருந்து முஹம்மத் பின் ஹாரிஸ் அறிவிக்கிறார். இவ்விருவரும் பலவீனமானவர்களே என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர் தனது தந்தை வழியாக இருநூறு செய்திகளை அறிவித்துள்ளார். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவையே என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்கள்.

இவர் மறுக்கப்பட வேண்டியவர் என்று ஸாஜி குறிப்பிட்டுள்ளார்.

ஸாலிஹ் பின் அப்துல் ஜப்பார், முஹம்மத் பின் ஹாரிஸ் ஆகியோர் வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை இவர் அறிவித்துள்ளார் என்று உகைலீ குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 9, பக்கம்: 231

எனவே இந்தச் செய்தி பலவீனமானதும், இட்டுக்கட்டப்பட்டதுமாகும். இதைக் கொண்டு செயல்படுவது கூடாது.

ஹாஜிகள் என்ற அடிப்படையில் இல்லாமல் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது எனக்காக துஆ செய்யுங்கள் என்று பரஸ்பரம் கேட்டுக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (8 / 86)

5279 – حَدَّثَنِى أَحْمَدُ بْنُ عُمَرَ بْنِ حَفْصٍ الْوَكِيعِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ حَدَّثَنَا أَبِى عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِى الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم– مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلاَّ قَالَ الْمَلَكُ وَلَكَ بِمِثْلٍ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும் என்று கூறாமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

நூல் : முஸ்லிம்