பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, August 18, 2025

கண்ணை மூடிக்கொண்டு தொழலாமா?


கண்ணை மூடிக்கொண்டு தொழலாமா?

நான் கண்ணைத் திறந்து தொழுவதால் கவனம் சிதறுகிறது.இது போன்ற நிலைகளில் கண்ணைத் மூடித் தொழலாமா?

பதில்: பொதுவாக தொழுகையில் கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்றோ கண்களை மூடக் கூடாது என்றோ எந்த ஆதாரங்களும் நேரடியாக ஹதீஸ்களில் கிடைக்கவில்லை.

அதே சமயம் ஒருவர் தனியாகத் தொழும்போது சுத் ரா எனும் தடுப்பை முன்னொக்கியபடி தொழவும்  ,மற்றவர் குறுக்கே சென்றால் தொழுபவர் குறுக்கே செல்பவரைத் தடுக்க வேண்டும் என நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள்.

இதைப் பின்வரும் ஹதீஸ்களில் அறியலாம்.

தொழுபவருக்கு குறுக்கே செல்வது பாவமாகும். மேலும் இதனால் தொழுபவரின் கவனம் சிதறுகின்றது. இதைத் தவிர்ப்பதற்காக தனியாகத் தொழுபவர் தனக்கு முன் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

صحيح مسلم

1139 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا وَضَعَ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ مِثْلَ مُؤْخِرَةِ الرَّحْلِ فَلْيُصَلِّ وَلاَ يُبَالِ مَنْ مَرَّ وَرَاءَ ذَلِكَ ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் (தொழும்போது) தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை (தடுப்பாக) வைத்துக் கொண்டு தொழட்டும். அந்தக் கட்டைக்கு அப்பால் கடந்து செல்பவரை அவர் பொருட்படுத்த வேண்டாம்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)

நூல் : முஸ்லிம்

சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! அவருடன் ஷைத்தான் இருக்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: இப்னுஹுஸைமா 800, இப்னுஹிப்பான்2362, ஹாகிம் 921, பைஹகீ 3261

இதுபோன்ற செய்திகளின் படி மற்றவர் தொழுகையில் குறுக்கிடும் நிலை இருந்தால் கண்களைத் திறந்துதான் தொழ வேண்டும்.

அதே வேளையில் பள்ளிவாசலில் முதல் ஸஃப்பில் யாரும் குறுக்கிடாத வகையில் நின்றாலோ, வீட்டில் தனியாக தொழும் நிலை இருந்தாலோ அப்போது குறுக்கிடுபவர் குறித்து அச்சமிருக்காது.இதுபோன்ற சூழலில் (நிற்றல்,ருகூ உ, ஸுஜூதில்) கண்களை மூடிக்கொண்டு தொழுவதால் மட்டும் கவனச் சிதறல் ஏற்படாமல் இருக்கிறது என்று கருதினால் கண்களை மூடித் தொழ தடை இல்லை.

No comments:

Post a Comment