நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் எது - அப்துல் காதிர் ஜீலானீ'யின் கூற்று.!
பரலேவிய ஸூஃபிய தரீக்காவாதிகள் மத்ஹபு சுன்னத் ஜமாஅத்தினர் - நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் ரபீவுல் அவ்வல் - 12. என்று கூறி - மீலாது பிறந்த தினவிழா கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் அவ்லியாக்களின் தலைவர் என்று வழிகேடர்களால் புகழப்பட்டு வரும் - ஸூஃபிய வழிகேடரான அப்துல் காதிர் ஜீலானீ தனது குன்னியத்துத் தாலிபீன் என்ற நூலில் நபி ஸல் அவர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் பிறந்ததாக கூறியுள்ளார்.
والعاشرة: ولد نبينا محمد -صلى الله عليه وسلم -فيه . நபி ஸல் அவர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் பிறந்தார்கள் என்று அப்துல் காதிர் ஜீலானீ கூறியுள்ளார்.
நூல்: குன்னியத்துத் தாலிபீன் -பாகம் -2.பக்கம்.91.
நபி ஸல் அவர்கள் முஹர்ரம் 10.நாளில் பிறந்ததாக அப்துல் காதிர் ஜீலானீ கூறுவதும் ஆதாரமற்ற செய்தி ஆகும். * நபி ஸல் அவர்கள் பிறந்த தினம் எது என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எதுவும் இல்லை. நபி ஸல் அவர்களின் மீலாது பிறந்த தினவிழா கொண்டாடவும் ஆதாரங்கள் இல்லை.
* அப்துல் காதிர் ஜீலானீயின் கூற்றுக்கு சுன்னத் ஜமாஅத் பரலேவிகளின் பதில் என்ன.?
- Yasir Arafat Imthathi
NTF.
No comments:
Post a Comment