வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்
முழுவதுமாக படியுங்கள்.......
ஏக இறைவனின் அருளைப் பெறுங்கள்💖
இன் ஷா அல்லாஹ் ❤️🩹
بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
நம்பிக்கை கொண்டோரே! #வெள்ளிக்கிழமையில் #தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! #வியாபாரத்தை_விட்டு_விடுங்கள்! நீங்கள் அறிந்தால்
இதுவே உங்களுக்கு நல்லது.
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்!
நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
#திருக்குர்ஆன் 62:9-10
-------------🌹---------------🌹--------------‐--🌹
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும்.
அன்று தான் முதல் மனிதர்
ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்.
அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்.
அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
அன்றுதான் மரணித்தார்கள்.
அன்றுதான் யுக முடிவு நிகழும்.
நூல்கள் - முஸ்லிம் : 1547, 1548
அஹ்மத் : 10970
முஅத்தா : 106, 364
-------------🌹---------------🌹--------------‐--🌹
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம்.
எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத்திற்கு வழிகாட்டினான்.
இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான்.
(இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.)
இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.
நூல்கள் - புகாரி : 876, 896,
முஸ்லிம் : 1549, 1550, 1551
-------------🌹---------------🌹--------------‐--🌹
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர்கள் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துக் கொண்டிருப்பார்கள்.
#முதலில்_வருபவர்
🐪 ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும்,
அதற்கடுத்து வருபவர்
🐂 மாட்டைக் குர்பானி
கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு
🐐 ஆடு, பிறகு
🐓 கோழி, பிறகு
🥚 முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போலவுமாவார்கள்.
இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டிவிட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.'
நூல்கள் :- புகாரி : 881, 929, 3211
முஸ்லிம் : 1540 1554, 1555
-------------🌹---------------🌹--------------‐--🌹
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்.
யார் அலட்சியமாக மூன்று ஜும்ஆவை விட்டுவிட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.
நூல் - நஸயீ : 1376
-------------🌹---------------🌹--------------‐--🌹
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!
#திருக்குர்ஆன் 33:56
-------------🌹---------------🌹--------------‐--🌹
உங்களது நாட்களில்
மிகவும் சிறந்த_நாள் #வெள்ளிக்கிழமையாகும்.
அந்நாளில் தான்
ஆதம் நபி படைக்கப்பட்டார்கள்.
அந்நாளில் தான் அவர்களது
உயிர் கைப்பற்றப்பட்டது.
அந்நாளில் தான்
ஸூர் ஊதுதல் நிகழும்.
அந்நாளில் தான்
#மக்கள்_மூர்ச்சையாகுதல்_நிகழும்.
எனவே அந்நாளில்
என் மீது #ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் வானவர்கள் மூலமாக என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது” என்று
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே!” என்று நபித்தோழர்கள் கேட்ட போது,
நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்”
என்று பதிலளித்தார்கள்.
நூல்கள் - அபூதாவூத் : 883
இப்னுமாஜா : 1085
அஹ்மத் : 16162
நஸயி : 1374
-------------🌹---------------🌹--------------‐--🌹
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்.
என்மீது ஒரு தடவை #ஸலவாத் சொல்கின்றவருக்கு
அல்லாஹ்
#பத்து_முறை அருள்புரிகின்றான்.
நூல் - முஸ்லிம் : 628 - 687
அல்லாஹ்வின்தூதரே! தங்களின் மீது நாங்கள் எப்படி 'ஸலவாத்' சொல்ல வேண்டும்?' என்று கேட்டோம்.
நபி ﷺ அவர்கள்,
'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்,
வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின்
கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்'
என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள் :- இறைவா!
இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று
முஹம்மத் ﷺ அவர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கும் கருணை புரிந்திடுவாயாக!
நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய்.
இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ சுபிட்சத்தை வழங்கியதைப் போன்று
முஹம்மத் ﷺ அவர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கும் சுபிட்சம் வழங்கிடுவாயாக!
நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய்.
நூல்கள் - புகாரி : 3369, 4797, 4798, 6265, 6357, 6358, 6360,
முஸ்லிம் - 677, 682, 683, 686
-------------🌹---------------🌹--------------‐--🌹
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
( #குறிப்பு ) :- நமது ஸலவாத், ஸலாம் நபி ﷺ அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு
நபி ﷺ அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. “நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்” என்று நபி ﷺ அவர்கள் கூறியதாக நஸயீயில் 1265வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று
நபி ﷺ அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப் படுவதாக
நபி ﷺ அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.)
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
-------------🌹---------------🌹--------------‐--🌹
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்'
நூல் - புகாரி : 877, 882, 894, 919
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
'ஜும்ஆ நாளில் ஒருவர் குளித்து, இயன்றவரை தூய்மையாகிப் பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி, (ஜும்ஆவுக்குப்) புறப்பட்டு (அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் அவருக்கு விதிக்கப் பட்டதைத் தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப் பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்.
நூல் - புகாரி : 910
-------------🌹---------------🌹--------------‐--🌹
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து,
அதை செம்மையாகவும் செய்து ஜுமுஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆவரைக்கும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன.
நூல் - முஸ்லிம் : 1557
-------------🌹---------------🌹--------------‐--🌹
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது,
உன் அருகில் இருப்பவரிடம்
நீ "மௌனமாக இரு" என்று கூறினாலும்
நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.
நூல் - முஸ்லிம் : 1541, 1542
-------------🌹---------------🌹--------------‐--🌹
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்.
யார் இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்
சிறு கற்களைத் தொட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.
நூல் - முஸ்லிம் : 1557
-------------🌹---------------🌹--------------‐--🌹
ஜும்ஆ நாளில் நபி ﷺ அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி ﷺ
அவர்கள் 'நீர் தொழுது வீட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் 'இல்லை' என்றார். '(எழுந்து) #இரண்டு_ரக்அத் தொழுவீராக!' என்று கூறினார்கள்.
நூல் - புகாரி : 930, 931
-------------🌹---------------🌹--------------‐--🌹
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் சுன்னத் தொழுவதாக இருந்தால் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!
நூல் - முஸ்லிம் : 1597, 1598, 1599
-------------🌹---------------🌹--------------‐--🌹
ஒருவர் தம் சகோதரரை அவரின் இடத்திலிருந்து கிளப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார்வதை
நபி ﷺ அவர்கள் தடுத்துள்ளனர்.
ஜும்ஆவிலா? என்று நாஃபிவு இடம் தாம் கேட்டபோது, ஜும்ஆவிலும் ஜும்ஆ அல்லாத மற்ற சமயங்களிலும் தான்' என்று நாஃபிவு விடையளித்ததாக இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்
நூல் - புகாரி : 911
--------------🌹----------------🌹-------------‐--🌹
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்.
வெள்ளிக்கிழமையன்று
ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை'
அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்.
நூல்கள் - புகாரி : 935, 6400
முஸ்லிம் : 1544, 1545
அஹ்மத் : 10545
-------------🌹---------------🌹--------------‐--🌹
யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் 'அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார். அதற்கு உமர்(ரலி) 'அது எந்த வசனம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
திருக்குர்ஆன் 5:3 (இந்தத் திருவசனம்தான் அது).
அதற்கு உமர்(ரலி) 'அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி ﷺ அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு #வெள்ளிக்கிழமை தினத்தில்
நபி ﷺ அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்' என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார்.
நூல் - புகாரி : 45
-------------🌹---------------🌹--------------‐--🌹
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், "எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!" என்று கூறுவர். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்" என்று கூறுவர்.
நூல் - முஸ்லிம் : 5448
-------------🌹---------------🌹--------------‐--🌹
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு🍂
No comments:
Post a Comment