பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, August 25, 2025

புதுவீடு புகுதல் விசயத்தில் ஏராளமான பித்அத்


புதுவீடு புகுதல் விசயத்தில் ஏராளமான பித்அத்களை இஸ்லாமிய சமுதாயம் செய்து வருகிறது..

1.வீடு வாடகைக்கு குடி போனால்  கூட .. பால் காய்ச்சுதல் என்ற சம்பிரதாயத்தை செய்து வருகின்றனர்..
பாலை வேண்டுமென்றே பொங்க வைத்து விடுவார்கள்.. எதற்காக என்றால் பால் பொங்கி வழிவதை போன்று வீட்டில் பரக்கத் பொங்கி வழியுமாம்..

2. புது வீடு கட்டுபவர்களின் பித்அத் அட்டகாசங்கள் சொல்லி மாளாது..

1. மனையடி சாஸ்திரம் பார்த்தல்
2. அக்னி மூளை, ஈசானி மூளை,
வாயு மூளை,... இப்படி பார்த்துதான் ஒரு இடத்தை வாங்குவார்கள்..
3.மூளக்குத்து இடமாக (அதாவது பாதைக்கு நேராக உள்ள இடங்கள்) இருந்தால் அதை ஒதுக்கி விடுவார்கள்..
4. இதெல்லாம் தாண்டி ஒரு இடத்தை வாங்கி வீட்டைக்  கட்ட ஆரம்பிக்கும்போது ஒரு ஃபாத்திஹா..
அஸ்திவாரம் போடும் போது ஒரு ஃபாத்திஹா..
கதவு நிலவு வைக்கும் போது ஒரு பாத்திஹா..
ஆர்சி போடும்போது ஒரு பாத்திஹா..
வீட்டின் நான்கு மூலைகளிலும் ஆட்டு ரத்தத்தை தெளிப்பது..

எல்லாவற்றையும் முடித்து வீட்டுக்கு குடி போகும்போது அன்று இரவு  ஆலிம்களை அழைத்து வந்து விடி மெளலூது ஓதுவது..
இதற்காக அவர்களின் மொத்த சம்பளமாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொடுக்கும் செல்வந்தர்கள் எல்லாம் இருக்கின்றனர்..

தவ்ஹீத் ஜமாஅத் இப்படிப்பட்ட அனாச்சாரங்களை தான் ஒழித்துக்கட்டி உள்ளது..

இந்த மாதிரி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்  காட்டித்தவில்லை

மார்க்கம் என்ற பெயரால்
அல்லாஹ்வும் ரசூலும் காட்டித்தராத அனைத்து  வழிபாடுமே நரகத்திற்கு கொண்டு சேர்க்கும்

”உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கüன் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 3456

”பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ர­) 
நூற்கள்: தப்ரானியின் அவ்ஸத், பஸ்ஸார் 

எனவே இந்த ஷிர்க்கான வழிபாட்டை விட்டும் விளகி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடி தூய இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுங்கள்

No comments:

Post a Comment