ஏமாறாதீர்கள் ! ஏமாற்ற வருகிறார்கள்!!
சூனியம்,கன்னேறு,ஜின் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு குரான் ,ஸுன்னா அடிப்படையில் தீர்வளிக்கிறார்களாம்!
முதலில் சூனியத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
இரண்டாவது கன்னேறுவால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
மூன்றாவது ஜின்னால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
இவற்றுக்கு குரான் சுன்னா அடிப்படை யில் விளக்கம் அளிக்கட்டும்.
அடுத்து
ஜின்னுடன் பேசுவதாகக் கூறும் இவர்கள்
எந்த மொழியில் பேசுவார்கள்?
எத்தனை மணிக்கு பேசுவார்கள்?
எப்படி பேசுவார்கள்?
அங்கே ஜின் ஆஜரானதை எப்படி கண்டுபிடிப்பார்கள்?
என்பதை குரான் சுன்னா அடிப்படையில் மக்கள் மன்றத்தில் விளக்கிவிட்டு பின்னர் அழைக்கட்டும்.
பொதுமக்களே உஷார்!!!
சூனியத்துக்கு அல்லாஹ்வின் வல்லமை இருப்பது உண்மை என நம்புவோரின் மறுமை நிலையை நபிகளார் தெளிவாக எச்சரித்துவிட்டார்கள்.
مسند أحمد – )
حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ – 26212 سَِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ الَّلِ عَنْ أَبِي الدَّرْدَاءِ
«لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، (وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ) وَلَا مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
நூல்: அஹ்மத்-27484 (26212)
No comments:
Post a Comment