*மவ்லிதுகள் மார்க்கத்திற்கு முரணானவையே!*
* ரபீஉல் அவ்வல் வந்து விட்டால் மஹல்லாக்களில் மவலிதுகள் வெகு விமர்சையாக ஓதப்படுகின்றன.
* நபிகளாரைப் புகழ்வதாகச் சொல்லி மவ்லிது கச்சேரிகள் அரங்கேற்றப்படுகின்றன.
* மவ்லிது ஓதாதவனெல்லாம் ஒரு இஸ்லாமியனா? என்று ஏளனமாய்ப் பார்க்கும் அளவிற்கு சிலர் மவ்லிது நம்பிக்கைகளில் தட்டழிந்து கிடக்கின்றனர்.
* உண்மையில் மவ்லிதுகள் மார்க்கத்தில் உள்ளவை என்றால் அதை ஒதுவதில் நாம் முன்னோடிகளாக இருந்திருப்போம்.
* அதை ஏகத்துவாதிகளான நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பதை மக்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்
*உயர்த்தப்பட்ட மாநபியின் புகழ்...*
* சுப்ஹான மவ்லிதை ஓதினால் தான் மாநபியின் புகழ் உயர்கிறது என மக்களில் சிலர் எண்ணுகின்றனர்.
* மகத்தான இறைவன் மாநபியின் புகழை வேண்டிய அளவு உயர்த்திவிட்டான்.
* உலகத்தில் எவராலும் பெறமுடியாத ஓங்கி உயர்ந்த மங்காத புகழை நபியவர்கள் அடைந்து விட்டார்கள்.
* அகிலத்தின் சொத்தாக அருளப்பட்ட அல்குர்ஆனில் வேண்டிய அளவிற்கு இறைவன் தன் நபியைப் புகழ்ந்து விட்டான்.
☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
*உமக்காக உமது புகழை நாம் உயர்த்தினோம்.*
`☝️Qur'an 94:4 📖`
*(நபியே) நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.*
`☝️Qur'an 68:4 📖`
*உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்து விட்டார். நீங்கள் துன்பப்படுவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. அவர் உங்கள் (நலன்) மீது ஆவல் கொண்டவர். (அவர்) இறைநம்பிக்கையாளர்கள் விஷயத்தில் கருணையும் அன்பும் கொண்டவர்.*
`☝️Qur'an 9:128 📖`
📖📖📖📖📖📖📖📖📖📖📖📖
*வரம்பு மீறிப் புகழாதீர். வாட்டும் நரகில் வீழாதீர்.*
* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீரம் மிக்கவர்கள்.
* குணக்குன்று.
* ஒழுக்கசாலி அசத்தியத்தை அழித்தொழிக்க அரும்பாடுபட்டவர்கள் இவ்வாறெல்லாம் நாம் நமது நபியைப் புகழ்வதில் தவறேதும் இல்லை.
* ஆனால் சிலர் எழுதி வைத்த குறிப்பிட்ட வரிகளைப் படிப்பதையும் நபிகளாரைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இறைவனுக்கு இணைகற்பிக்கின்ற அளவு புகழ் மாலைகளை (?) படிப்பதையும்தான் தவறு என்கிறோம்.
* நபிகளாருக்கு பிரச்சினை முந்தைய இருந்துள்ளது. காலங்களிலும் அதை ஒரு `நபியவர்கள் மனிதரை வரம்பு கடந்து புகழும் எச்சரித்துள்ளார்கள். கடுமையாக....`
📜📜📜📜📜📜📜📜📜📜📜📜
_கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை (கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான் தான். அல்லாஹ்வின் அடியான் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்._
`அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புஹாரி: 3445`
📚📚📚📚📚📚📚📚📚📚📚📚
*கவிதைகள் வணக்கமாகுமா?*
* மவ்லிதுகள் என்பவை அரபுக் கவிதைகள் ஆகும்.
* அரபி மொழி தெரிந்த சில கவிஞர்கள் அதை இயற்றியுள்ளனர்.
* அவற்றைத்தான் இவர்கள் வணக்கம் எனக் கருதி ஓதிவருகின்றனர்.
* கவிதை குறித்த இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதை ஆராய்வோம்.
☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
*இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. அது அவருக்குத் தேவையுமில்லை.*
`☝️Qur'an 36:69 📖`
📖📖📖📖📖📖📖📖📖📖📖📖
* நபிகளாருக்கு கவிதை தேவையில்லை என்பதால் இறைவன் கற்றுக் கொடுக்கவில்லை. நபிகளாருக்கே கற்றுக் கொடுக்கப்படாத ஒன்று எவ்வாறு வணக்கமாக இருக்க இயலும் ?என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
*வழிகேடர்களே கவிஞர்களைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அவர்கள் அலைந்து திரிவதையும் தாம் செய்ததாக)க் கூறுவதையும் நீர் பார்க்கவில்லையா?*
`☝️Qur'an 26: 224-226 📖`
📖📖📖📖📖📖📖📖📖📖📖
* கவிஞர்களிடம் நிறைய பிரச்சினைகள் உண்டு அவர்கள் ஏராளமான பொய்களைப் புனைவர்கள் கவிதைக்கு பொய்யழகு என்பது அவர்களே ஏற்றிக் கொண்ட விஷயம் நானே பொய் மட்டுமல்ல வாண்ணை என்ற பெயரில் வரம்பு மீறுவர்.
* அவர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் வாழ்க்கைக்கு ஒத்து வராது இத்தகைய பிரச்சினைகள் இருப்பதால் தான் இஸ்லாம் கவிதைகளையும் கவிஞர்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
* மார்க்கத்திற்கு அனுமதியைத் தாண்டி கவிதைகளுக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் அடிப்படையிலேயே முரணில்லாத கவிதைகளை படித்துக் கொள்வது குற்றமில்லை என்கிற மவ்லிதுகள் தவறானவை என்பது இதன் இல்லை. எனவே மூலம் நிரூபணமாகிறது.
*ஒதும் வரிகளும், மோதும் நெறிகளும்:*
* ரபீஉல் அவ்வல் மாதம் ஓதப்படும் சுப்ஹான மவ்லிதில் இறைவனுக்கு இணைகற்பிக்கும் வரிகளும், மார்க்க வரம்புகளுக்கு எதிரான அபத்தங்கள் நிறைந்த ஆபத்தான வரிகளும் அதிகம் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
أنت غفار الخطايا
❌ என் பாவங்களை மன்னிப்பவர் தாங்களன்றோ...
كفروا علي ذنوبي
❌ என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்.
يا من تمادي واجترم لب واعترف وارج الكرم
ولد بمن حل الحرم
* ❌ குற்றமும் பாவமும் செய்து விட்டவனே.
* ❌ மன்னிப்புக் கேள் குற்றத்தை ஒப்புக் கொள், அருனை எதிர்பார்.
* ❌ சரணடைந்து விடு இவை அனைத்தையும் ஹரமில் தங்கியிருப்பவரிடம் கேள் சுப்ஹான மவ்லிது கூறும் கொடி வரிகள் இவை.
* ❌ இப்போது மாமறை கூறுவதைப் பாருங்கள் அவர்கள் மானக்கேடானதைச் செய்தாலோ...
* ❌ அல்லது தமக்குத் தாமே அநிர்யம் செய்து கொண்டாலோ...
☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
*அல்லாஹ்வை நினைத்துத் தமது பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்? அவர்கள் தெரிந்து கொண்டே தாங்கள் செய்தவற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள்.*
`☝️Qur'an 3:135 📖`
📖📖📖📖📖📖📖📖📖📖📖📖
* *✅ அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது என இறைவன் தீர்க்கமாகக் கூறியிருக்கும் போது...*
* ❌ நபி (ஸல்) அவர்களும் பாவங்களை மன்னிப்பவர்கள் எனக்கூறுவதையும் அவர்களிடம் பிழை பொறுக்கத் தேடுவதையும் ஏற்க முடியுமா?
* இந்த நம்பிக்கை ஒருவரின் ஈமானைத் தகர்த்தெறிந்து விடாதா?
* அடுத்ததாக நோய் நிவாரணம் தருவது நபிகளார் என்ற அபத்தக் கருத்தை சுப்ஹான மவ்லிதில் ஓதுகிறார்கள்.
السلام عليك يا مبري السقام
❌ நோய் நீக்குபவரே. உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்.
الديه برء السقام
❌ நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் நபியிடமே உள்ளது.
☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
*இறைவனால் உற்ற நண்பன் என்று கூறப்பட்ட இப்ராஹீம் நபியவர்களே அல்லாஹ்விடம் தான் நோய் நிவாரணம் தேடியுள்ளனர். நான் நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறன்*
`☝️Qur'an 26:80 📖`
📖📖📖📖📖📖📖📖📖📖📖📖
* இந்த வசனத்திற்கு முரணான கருத்தை மேலே நாம் குறிப்பிட்ட மவ்லிது வரிகள் தருகின்றன.
* *இது போன்ற ஏராளமான அபத்தங்கள் நிறைந்த வரிகள் சுப்ஹான மவ்லிதில் நிரம்பக் காணப்படுகின்றன.*
* எனவே இத்தகைய *மார்க்க முரண்கள் நிறைந்த மக்களை இணை கற்பிக்கும் பாவத்தில் தள்ளுகிற சுப்ஹான மவ்லிதைப் புறக்கணித்து அல்லாஹ்வும், தூதரும் காட்டிய வழியில் பயணிக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம் சமூக மக்களை ஆக்கியருள்வானாக.*
No comments:
Post a Comment