பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, August 25, 2025

அல்லாஹ்வை நேசிப்பது போல் மற்றவைகளை நேசிப்பது…

அல்லாஹ்வை நேசிப்பது போல் மற்றவைகளை நேசிப்பது…

இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை கடுமையாக நேசிக்க வேண்டும். யாரையும் நேசிக்காத அளவிற்கு நேசிக்க வேண்டும். துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் அல்லாஹ்வையே நினைவு கூற வேண்டும். ஆனால் தரீக்காவாதிகளும் கப்ரு வழிபாட்டுக்காரர்களும் அல்லாஹ்வை மட்டும் நினைவு கூற வேண்டிய இடங்களில் நேரங்களில் முஹ்யித்தீனையும் அப்துல்காதர் ஜீலானியையும் நினைக்கிறார்கள்.

வீட்டுச் சுவர்களிலும் கடிதத்தை துவக்கும் போதும் யா முஹ்யித்தீன் யா ரசூலல்லாஹ் என்று எழுதுகிறார்கள். இதையே திக்ருகளாகக் கூறுபவர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ்வை நேசிப்பதை விட அடியார்களை இவர்கள் நேசிக்கிற காரணத்தினால் இப்படிப்பட்ட இழி செயல்களைச் செய்கிறார்கள். அல்லாஹ்வை நேசிக்கும் பாக்கியத்தை இழக்கிறார்கள். இது இணைவைப்பாகும்.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

அல்குர்ஆன் (2 : 165)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மூன்று தன்மைகள் அமையப் பெறாத) எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார். (அவை:)

ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராவது.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (6041)

No comments:

Post a Comment