மிம்பருக்கு எத்தனை படிக்கட்டு?
பள்ளிவாசலில் ஜுமு ஆ பேருரை உள்ளிட்ட பல்வேறு உரைகள் மிம்பர் மீதேறி இமாமால் நிகழ்த்தப்படுகிறது.
இதில் மிம்பர் படிக்கட்டுகளுக்கு இத்தனை படிகள்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறதா?
ஜுமு ஆ தொழுகைக்கு முன்னால் உரை அவசியம் என்பன போன்ற பல நிபந்தனைகளை மார்க்கம் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றில் மிம்பர் என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட ஒரு வழிமுறையாக உள்ளது.
மிம்பர் மீதேறி உரை நிகழ்த்துவது மிகவும் விரும்பத்தக்கக் காரியமாகும்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 10)
912- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ كَانَ النِّدَاءُ يَوْمَ الْجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الإِمَامُ عَلَى الْمِنْبَرِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَلَمَّا كَانَ عُثْمَانُ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ.
நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல்பாங்கு இமாம் மிம்பர் மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்த போது ஸவ்ரா’ எனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத்(ரலி), நூல்: புகாரி-912
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 12)
919- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَالِمٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ فَقَالَ مَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ.
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றபடி ஜுமுஆத் தொழுகைக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும்’ என்று கூறுவதை நான் செவியேற்றேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)நூல்: புகாரி-919
மிம்பர் படிகளுக்கு நிபந்தனை உண்டா?
பொதுவாக ஜுமு ஆ உரைநிகழ்த்த பயன்படும் மிம்பருக்கு இத்தனை படிகள் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.
நபிகளார் காலத்தில் இரண்டு படிக்கட்டு அடங்கிய மிம்பர் இருந்தது.அதை பின்வரும் ஹதீஸில் அறியலாம்.
أنَّ نبيَّ اللهِ ﷺ كان يقومُ يومَ الجُمُعةِ فيُسنِدُ ظهْرَه إلى جِذعٍ منصوبٍ في المسجدِ فيخطُبُ الناسَ، فجاءه رُومِيٌّ فقال: أصنَعُ لك شيئًا تقعُدُ عليه وكأنَّك قائمٌ؟ فصنَعَ له منبرًا له درَجتانِ ويقعُدُ على الثالثةِ، فلمّا قعَدَ رسولُ اللهِ ﷺ على ذلك المنبرِ، خارَ الجِذعُ كخُوارِ الثَّوْرِ حتى ارْتَجَّ المسجدُ لخُوارِه؛ حُزنًا على رسولِ اللهِ ﷺ، فنزَلَ إليه رسولُ اللهِ ﷺ فالْتزَمَه وهو يخُورُ، فلمّا الْتزَمَه رسولُ اللهِ ﷺ سكَتَ، ثمَّ قال: والذي نفسُ مُحمَّدٍ بيدِه، لو لم أَلتزِمْهُ لم يَزَلْ هكذا إلى يومِ القيامةِ؛ تحزُّنًا على رسولِ اللهِ، فأمَرَ به نبيُّ اللهِ ﷺ فدُفِن.
الراوي: أنس بن مالك • شعيب ، تخريج مشكل الآثار (٤١٧٩) •
நபிகளார் உரை நிகழ்த்த மிம்பர் தயார்செய்யப்பட்டது.அதற்கு இரு படிக்கட்டுகள் இருந்தன.(இரண்டாம் படிக்கட்டில் நின்று)மூன்றாவதில் அமர்ந்துகொள்வார்கள்.
(ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)
நூல்: முஷ்கிலுல் ஆஸார் (4179)
மேற்கண்ட நபிமொழியில் இரண்டு படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட மிம்பரில் நபிகளார் ஏறி பிரசங்கம் செய்துள்ளார்கள் என அறிய முடிகிறது. அதே சமயம் மிம்பர் மரத்தால்தான் செய்யப்பட வேண்டுமென்றோ, அதன் அகலம்,நீளம்,படிக்கட்டுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த நிபந்தனைகளையும் ஹதீஸ்களில் காணமுடியவில்லை.
எனவே பள்ளிவாசலின் விசாலத்திற்குத் தகுந்தார்போல் மிம்பர் படிகளை அமைத்துக்கொள்ளலாம்.
#இஸ்லாம் #தவ்ஹீத் #மிம்பர் #ஜுமுஆ
No comments:
Post a Comment