வஹ்ஹாபிகள் யூத அமெரிக்க அடிமைகளா?
நெடுங்காலமாக பலஸ்தீனத்தை அழித்து வரும் இஸ்ரேலுக்கு எதிராக யாருமே வாய் திறக்காத பொழுது ஈரான் இஸ்ரேலால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நேரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதலை துவங்கியது .
இது ஈரானுக்கு ஏற்பட்ட பாதிப்பை துடைப்பதற்கான பதிலடி என்றாலும் கூட பலஸ்தீனத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க உலக நாடுகளே அடங்கியிருக்கும் நேரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தைரியமாக துணிச்சலாக இறங்கியதை நாம் வரவேற்கவே செய்கிறோம் .
ஆனால் இந்த ஈரானிய ஆதரவைப் பயன்படுத்தி இந்த இஹ்வானிச நச்சுப் பாம்புகள் தங்களது காழ்ப்புணர்வுகளையும் ஆதங்கங்களையும் நேரம் பார்த்து கொட்டி தீர்த்து இருக்கிறார்கள் .
அதில் ஒன்றுதான் யூத அமெரிக்க வஹ்ஹாபிச அடிமை என்ற அவதூறாகும்.
இவர்கள் ஓர் இறை கொள்கையை எடுத்து முழங்கக் கூடியவர்களையும் இணைவைப்புக்கு எதிராக களமாடுபவர்களையும் பித் அத்துகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களையும் மட்டம் தட்டும் வகையில் இவர்கள் இடும் முத்திரை யூத அமெரிக்க அடிமைகளான வஹாபிகள் என்று சொல்வார்கள்.
பொதுவாக இவர்கள் வஹாபிகள் என்று மட்டம் தட்ட கூடிய இந்த சொல்லாடல் சமாதி வழிபாடு நடத்தும் பரேலுவிகளாலும் ஷியாக்களாலும் ,ஆட்சியைப் பிடிக்க பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றளித்த இஹ்வானிய பயங்கரவாதிகளாலும் மொழியப்படும் ஒரு அவதூறு பெயர்தான் இது!
கி.பி 1700 களில் அதாவது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் முகமது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைத்து அரேபிய மண்ணில் துருக்கியை விரட்டி சவூத் மன்னர் தலைமையில் ஏகத்துவ கொள்கையுடன் தடம் பதித்தார்கள். இதன் பின்னர் அது சவூதி அரேபியா என்ற பெயர் பெற்றது.
சவுதியில் தர்கா வழிபாடுகளை தகர்த்தெறிந்த தவ்ஹீத்ச் சிந்தனையாளர்களான இந்த அப்துல் வஹ்ஹாப் சவுத் மன்னர் தலைமையிலான சவுதி அரேபியா உருவானதற்கு பிறகு இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள் வஹாபிகள் என்று இவர்களுக்கு பெயர் சூட்ட ஆரம்பித்தார்கள் .
இந்த எதிர்ப்பினுடைய உச்சம் இவர்களை அமெரிக்க அடிமை வஹ்ஹாபிகள் யூத அமெரிக்க வஹ்ஹாபிகள் என்று புனைப்பெயர் வைக்க தொடங்கி விட்டார்கள்.
இந்த பெயரை சவுதி அரேபிய நாட்டு மக்களுக்கு மட்டும் இவர்கள் சூட்டவில்லை.
மாறாக அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை எதிர்த்த அனைத்து மக்களுக்கும் இந்த பட்டப் பெயரை சுட்ட துவங்கி விட்டார்கள்.
1950களில் இந்தியாவில் , சமாதி வழிபாட்டுக்கு எதிராக பேசிய அஹ்லே ஹதீஸ் தரப்பினரையும் தியோபந்திகளையும் தப்லீக் ஜமாத்தினரையும் வஹ்ஹாபிகள் என்றே தர்கா வணங்கிகள் சொல்லி வருகின்றனர்.(ஆனால் இன்றோ இந்த தியொபந்திகளும் தப்லீக் ஜமாத்தினர்களும் சமாதி வழிபாட்டுக்கு எதிரான பிரச்சாரங்களை கைவிட்டு விட்டு தர்கா வணங்கிகளோடு கைகோர்த்து விட்டார்கள் என்ற கவலையான் நிகழ்வை யாரும் மறுக்க முடியாது)
தமிழகத்தில் தவ்ஹீத் சகோதரர்களை பொறுத்த வரைக்கும் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைப்பது முகமது பின் அப்துல் வஹ்ஹாப் சொன்னார் என்பதற்காக அல்ல.
மாறாக நம்மை படைத்த அல்லாஹ் தன் திருமறையில் கூறியுள்ளான் என்பதற்காகவே இதை செய்து வருகிறார்கள்.
குர் ஆன் ,ஹதீஸிற்கு மாற்றமாக முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் சொன்னாலும் அதைப் புறக்கணிப்பார்கள்.
ஆனால் இந்த இஹ்வானிச பயங்கரவாதிகளோ நம்மை யூத அமெரிக்க வஹாபிகள் என்று பட்டம் சூட்டி தங்களுடைய கொடிய வெறுப்பை தீர்த்து வருகிறார்கள்.
இவர்களின் பார்வையில் அல்லாஹ்வை கடவுள் என்று ஒப்புக்கொண்ட உலகத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் சுன்னாவாக இருந்தாலும் ஷியாவாக இருந்தாலும் அத்தனை பேரும் முஸ்லிம்கள் தாணாம்.
அத்தனை பேரையும் சமமாக தான் பார்ப்போம் என்பதுதான் இந்த இஹ்வானி பயங்கரவாத குழுவின் சித்தாந்தமாகும்.
அல்லாஹ்வை கடவுள் என்று ஒப்புக்கொண்டு விட்டால் அவர்கள் அத்தனை பேரும் முஸ்லிம் என்கிற குடையின் கீழ் வந்து விடுவார்கள் என்றால் அல்லாஹ்வை கடவுள் என்று நம்பிய மக்கத்துக் காஃபிர்கள் வந்திருக்க வேண்டும் .அவர்களுக்கு எதிராக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பத்ர் களத்தை சந்தித்திருக்கக் கூடாது .
பல்வேறு போர்க்களங்களை சந்தித்து இறுதி கட்டமாக கஃபாவை கைப்பற்றி இருக்கக் கூடாது.
மக்கத்து காஃபிர்கள் அல்லாஹ்வை கடவுள் என்று சொல்லிவிட்டு தங்களது நல்லடியார்களை கடவுள் இடத்திலிருந்து பரிந்துரை பேசுபவர்கள் என்ற நம்பி அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை போல இந்த ஷியாக்காரர்கள் அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை உயர்த்தி அவரை கடவுள் என்று ஒரு பிரிவும் அவர்தான் தூதர் என்று மற்றொரு பிரிவும் அவர் தான் இறைத்தூதரின் வாரிசு என்று இன்னொரு பிரிவும் அவர் வானவர்களை விட நபிமார்களை விட சிறந்தவர் என்று மற்றொரு கருத்தையும் உள்ளே புகுத்தி தங்களது வாழ்க்கையின் இன்ப துக்கங்களுக்கு அனைத்துக்கும் பொறுப்பாளி அலி அவர்களே என்ற இறைவனுக்கு அலியை இணையாக்குகிற பாவிகளாக இருந்து வருகிறார்கள்.
அப்படி இருக்க இவர்களையும் அல்லாஹ்வுக்கு இணை வைக்க கூடாது என்று சொல்லும் கொள்கைவாதிகளையும் ஓரணியில் இணைப்பது என்பது விஷத்தையும் பாலையும் கலப்பதை விட மோசமானது.
அந்த வேலையைத்தான் போலி ஒற்றுமை என்கிற போர்வையில் இந்த இஹ்வானிச பயங்கரவாதிகள் செய்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment