பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, August 25, 2025

மவ்லித் என்பதின் பொருள் என்ன?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

தொடர் -1

மவ்லித் என்பதின் பொருள் என்ன?

மவ்­லிது எனும் அரபிச் சொல்லி­ன் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8)

ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான, அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கேடு கெட்ட கவிதைகளுக்கு மவ்­லிது எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

அல்லாஹ் மவ்லூத் ஓதியதாக பொய்யர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லி­தை எழுதியவர் யார் என்பது தெரியாது. இதோ அவர்களின் நூலிலேயே கூறப்பட்டிருப்பதைப் பாருங்க்.
மகுடமாய்த் திகழும் சுப்ஹான மவ்லி­தை கல்விக் கடல் கஸ்ஸாலி­ இமாம் (ரஹ்) அவர்களோ, அல் இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றி யிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 5)

மவ்லித் கூடாது என்பதற்கான ஆதாரங்கள் :

இஸ்லாம் என்பது அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தந்தவைதான். மவ்­லித் என்பது அல்லாஹ்வோ, நபியவர்களோ காட்டித் தந்த ஒன்றல்ல. மார்க்கத்தில் ஒருவன் இணைவைக்காத, தவறில்லாத கவிதைகளை படித்தால் தவறில்லை என்ற அளவிற்குத்தான் மார்க்கம் கவிதைகளை மதிக்கின்றது. ஆனால் மவ்­லித் என்ற அனாச்சாரத்தை உருவாக்கி அதை மார்க்கமாக்கியவர்கள் குர்ஆனில் நபிமார்களைப் பற்றி கூறப்பட்ட வசனங்களையும், நபியவர்களைப் பற்றி இறைவன் புகழ்ந்து கூறும் வசனங்களையும், இணைவைப்பில்லாமல் சில ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளையும் காட்டி இவர்கள் இட்டுக்கட்டிய மௌ­தை ஓதலாம் என பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர். கேடுகெட்ட கவிதைகளை (இவர்கள் பாணியில் மவ்­லித்) நபியவர்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளதை மறைத்து விடுகின்றனர்.
ஸஹாபாக்கள் கூறிய கவிதைகள் அவரவர் கூறிய கவிதை தானே தவிர இவர்களைப் போன்று எவனோ உருவாக்கியவற்றை அவர்கள் எழுதிவைத்துப் படிக்கவில்லை.

ஸஹாபாக்கள் போர்க்களங்களிலும், யதார்த்தமான நிலையில் இருக்கும் போது மட்டுமே சில கவிதைகளைக் கூறியுள்ளார்கள். இவர்களைப் போன்று வழிபாடாகச் செய்யவில்லை
ஆனால் இவர்களோ அதற்கென்று நாள் நேரங்களைக் குறித்து, கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, தோரணங்கள் கட்டி வழிபாடாகச் செய்கின்றனர்.

ஸஹாபாக்கள் கூறும் போது நபியவர்கள் அதிலுள்ள தவறுகளைத் திருத்தியுள்ளார்கள். இவர்கள் எழுதியவற்றை எதையும் நபியவர்கள் திருத்தவில்லை.

திருமணத்திற்கும் விபச்சாரத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ, அது போன்று ஸஹாபாக்கள் கூறிய கவிதைகளுக்கும், முறைகளுக்கும் இவர்கள் பாடும் கவிதைகளுக்கும், முறைகளுக்கும் வித்தியாசங்கள் உள்ளது.
விபச்சாரியோடு செய்வதைத்தானே மனைவியோடும் செய்கின்றான் என்று கூறி விபச்சாரத்தை எப்படி நியாயப் படுத்த முடியாதோ அது போன்றே ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளைக் காட்டி இவர்கள் ஓதும் மௌ­தை நியாயப் படுத்த முடியாது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

மௌலித் யூத கிறிஸ்தவக் கலாச்சாரம்

3456- حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ ، قَالَ : حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنْ أَبِي سَعِيدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ :
لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ.
”உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கüன் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 3456

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தது போன்றே இன்று முஸ்­ம்களிடம் பிறந்த நாள் கொண்டாடுதல், இறந்த நாள் அனுஷ்டித்தல் போன்ற காரியங்கள் ஏற்பட்டு விட்டன. உண்மையில் பிறந்த நாள் விழா, இறந்த நினைவு தினம் எல்லாமே யூத, கிறித்தவ கலாச்சாரமாகும். இது இஸ்லாமிய கலாச்சாரம் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்கு முந்தைய நபிமார்கள், நல்லடியார்கள் யாருக்கும் பிறந்த நாள் விழா எடுத்தது கிடையாது. யாருடைய இறந்த தினத்தையும் அனுசரித்தது கிடையாது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித்தோழர்களின் காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தோன்றவில்லை. சிறந்த தலைமுறையினரான அவர்களிடம் இல்லாத ஒரு புதிய செயலை வணக்கம் என்ற பெயரில் இன்றைக்கு முஸ்­ம்கள் தங்களுக்கு மத்தியில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது யூத, கிறித்தவ கலாச்சாரமாகும்.

4033 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِى مُنِيبٍ الْجُرَشِىِّ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ».
”பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ர­) நூற்கள்: தப்ரானியின் அவ்ஸத், பஸ்ஸார் 

பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ் மூலமும், இன்னபிற கட்டளைகளின் மூலமும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். இது போன்ற காரியங்களை ஒரு போதும் செய்யக் கூடாது என்று நபித்தோழர்களைத் தடுத்திருக்கின்றார்கள்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

#tntj #islam #muslim #thowheed #mavlid #nabi #mohammed #dharga #தவ்ஹீத் #இஸ்லாம் #முஸ்லிம் #முஹம்மது #மீலாது #தர்கா #ஷிர்க்

No comments:

Post a Comment